விலைவாசி உயர்வு மற்றும் ஊழலுக்கெதிராக தமிழக அரசைக் கண்டித்து அ.தி.மு.க.வின் சார்பில் 07.02.2011 அன்று மாலை 05.00 மணிக்கு தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க.வின் தற்போதைய தோழமைக் கட்சியான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட அனைத்து கிளைகளும், இதர தோழமைக் கட்சிகளும் கலந்துகொண்டன.
காயல்பட்டினத்திலிருந்து இரண்டு வாகனங்களில் த.மு.மு.க., ம.ம.க. தொண்டர்கள் சென்று கலந்துகொண்டனர். நகர த.மு.மு.க. தலைவர் ஜாகிர் வழிநடத்தினார். துணைத்தலைவர் தமீமுல் அன்சாரீ, செயலாளர் ஃபிர்தவ்ஸ், ம.ம.க. நகர செயலாளர் அய்துரூஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். |