தூத்துக்குடி மாவட்டத்தில் சுனாமி மாவட்ட செயலாக்க அளவில் அவசரகால சுனாமி மறுசீரமைப்பு திட்டத்தின் (ETRP-VRCC) கீழ் கட்டப்பட்டு வரும் எளிதில் பாதிப்புக்குள்ளாகாத வீடுகள் குறித்து பத்திரிக்கையாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று (8.2.2011) அன்று பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இப்பயணத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சி.க.வீரணன், செயற்பொறியாளர் திரு பிரேம்குமார், உதவி செயற்பொறியாளர்கள் திரு ஆர்.கலைச்செல்வன், திரு பவுன்ராஜன் மற்றும் உதவி பொறியாளர் திரு கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்குழு முதலில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த வெள்ளப்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுவரும் 55 வீடுகளையும் தருவைகுளத்தில் தொகுப்பு-III இல் 59 வீடுகளையும், தொகுப்பு-IV இல் கட்டப்பட்டு வரும் 69 வீடுகளையும், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் தெற்கு வேம்பார் ஊராட்சியில் நடைபெற்றுவரும் 48 வீடுகளின் கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டது.
இம்மாவட்டத்தில் வேம்பார், தெற்கு வேம்பார், சிப்பிக்குளம், கீழவைப்பார், பெரியசாமிபுரம், பட்டினமருதூர், தருவைகுளம், வெள்ளப்பட்டி, குலசேகரபட்டினம், மணப்பாடு மற்றும் பெரியதாழை ஆகிய ஊராட்சிகளில் ஏழு தொகுப்பாக மொத்தம் 408 வீடுகள் ரூபாய் 1251.38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இவ்வீடுகளில் 129 வீடுகள் பூச்சு வேலையும், 113 வீடுகள் மேற்கூரை அமைக்கப்பட்டும், 51 வீடுகள் கூரை மட்டத்திலும், 66 வீடுகள் ஜன்னல் மட்டம் அமைக்கப்பட்டும், 17 வீடுகள் ஜன்னல் மட்டத்திலும், 28 வீடுகள் ஜன்னலுக்கு கீழ் மட்டத்திலும், 4 வீடுகள் அடிப்படை நிலையிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் கடந்த ஆகஸ்ட் 2010 மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு, 15 மாதங்களில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டு, பணிகளை துரிதப்படுத்தி 15.5 .2011 க்குள் அனைத்து வீடுகளையும் முடித்து சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிட திட்டமிடப்பட்டு பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளன.
இதுதவிர அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூபாய் 47.90 லட்சத்தில் 3 தொகுப்புகளாக சிமெண்ட் தளம் அமைக்கும் பணிகளும் தார்சாலை அமைக்கும் பணிகளும், புதிய தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு இப்பணிகள் அனைத்தும் 31.3 .2011 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுனாமி பாதித்த பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை தரம் மேம்பாட்டிற்காக சுயஉதவி குழுக்களுக்கு பயிற்சி, 746 சுழல் நிதி, பொருளாதார கடன் உதவி - 190 புதிய குழுக்களுக்கு அமைப்பு கட்டணம், 2073 மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு தொழில் கடனும் வழங்கப்பட்டுள்ளது.
கட்டப்படும் வீடுகளின் தரம் குறித்து செட்கோ தொண்டு நிறுவனம் மூலம் பயனாளிகளுக்கு பயிற்சி அளித்தும், பணிகளை அவ்வப்போது பார்வையிட்டும், பயனாளிகளுக்கு மாதம் ரூபாய் 500/- விதம் வாடகையும், தலா ரூபாய் 1000/- கட்டிட மாறுதல் படியும் வழங்கப்பட்டு வருகிறது.
தகவல்:
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தூத்துக்குடி. |