காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் இரண்டாமாண்டு பட்டமளிப்பு விழா இன்று (08.02.2011) காலை 11.00 மணிக்கு, கல்லூரி கலையரங்கில் நடைபெறுகிறது.
கல்லூரியின் நிறுவனர் தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் விழாவிற்குத் தலைமை தாங்குகிறார். கல்லூரியின் செயலர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் கல்லூரியின் அறிமுகவுரையாற்றுகிறார்.
நெல்லை மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் முனைவர் எஸ்.மாணிக்கம் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவதோடு, மாணவியருக்கு பட்டம் வழங்குகிறார். விழா விபரம் பின்வருமாறு:-
விழாவின் சிறப்பம்சமாக, இக்கல்லூரியில் பயின்று பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்றுள்ள மாணவியருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. தரவரிசை பெற்றுள்ள மாணவியர் விபரம் பின்வருமாறு:-
1. வாழ்த்துக்கள் posted byசாளை ஜியாவுதீன் (அல்கோபார் )[08 February 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2584
வாழ்த்துக்கள். நேற்று தான் கல்லூரி திறந்தது மாதிரி உள்ளது, அதற்க்குள் இரண்டு செட் மாணவிகள் வந்து விட்டார்களா!! மாஷா அல்லாஹ். மாஷா அல்லாஹ்.
அணைத்து மாணவிகளுக்கும் எங்களின் பாராட்டுக்கள், குறிப்பாக பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்றுள்ள மாணவியருக்கு சிறப்புப் பாராட்டுக்கள். தாங்கள் வாழ்வில் எல்ல வளங்களும் பெற்று நல்வாழ்வு வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்.
பேராசிரியர்கள், நிர்வாகிகள் அனைவர்களுக்கும் எங்களின் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
- பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் ரேங்க் யாரும் இல்லையே? ஒரு சின்ன மனக்குறைதான். வரும் ஆண்டில் முதல் ரேங்க் எடுத்து ஒரு இன்ப அதிர்ச்சி தாருங்களேன்!!, கண்டிப்பாக உங்களால் முடியும் மாணவிகளே..இன்ஷாஹ் அல்லாஹ்.
3. கல்வியை கற்பதற்கு ஓர் எல்லை இல்லை posted byN.S.E. மஹ்மூது - 1955 (Kayalpatnam)[08 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2586
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பட்டம் பெறும் மாணவியர்களுக்கும், பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்று பரிசுகளைப் பெறும் மாணவியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அன்பு மாணவிகளே! படித்து பட்டம் வாங்கியதோடு நின்றிடாமல், கற்றக்கல்வியை தங்கள் வாழ்விலே பயன்படுத்துங்கள்.
குடும்பத்திலே , தனிப்பட்ட வாழ்விலே நிகழும் நல்லது, கெட்டதுகளை சிந்தித்து செயல்படுத்துங்கள்.
கல்வியை கற்றிருக்கும் உங்களுக்கும் - கல்வி அறிவு இல்லாதவருக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து செயலாற்றுங்கள்.
கல்வி கற்பது என்பது அறிவை பெருக்குவதற்குத்தான் என்பதை முழுமையாக உணருங்கள் - வேலைக்கு செல்வதற்காக அன்று.
--------------------------------------------------
மார்க்கம் சொல்கின்றது ஒவ்வொரு ஆணும், பெண்ணும் கல்வியை கற்க வேண்டும் என்று, அதன்படி உலக கல்வியை கற்றிருக்கும் நீங்கள் மார்க்கக் கல்வியையும் அவசியம் கற்க வேண்டும் என்பதை மறந்திடாமல், மார்க்கக் கல்வியின்பால் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.
கல்வியை கற்பதற்கு ஓர் எல்லை இல்லை , வயது வரம்பு இல்லை, வாழ்நாள் முழுவதும் கற்றாலும் கல்வி தாகம் அடங்காது.
--------------------------------------------------
அன்பு மாணவிகளே! மார்க்கம் போதிக்கின்றது குடும்பத்தை காப்பாற்ற வேண்டியப் பொறுப்பு ஆண்களுக்கு என்று. எனவே பெண்களுக்கு அந்த சிரமம் இல்லை என்பதால், அதிகமான மேல் படிப்பு தேவை இல்லை என்பதை உணரவேண்டியது படித்து பட்டம் வாங்கிய உங்களுடைய கடமையாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் அனைவர்களுக்கும் சிறப்பான, மேன்மையான வாழ்வை ஏற்படுத்தித் தந்து ஈருலகிலும் உங்களை
மேன்மையடையச் செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross