பொதுநல ஊழியரும், சிறந்த சிந்தனையாளருமான எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மறைவிற்கு பெங்களூரு காயல் நல மன்ற பொதுக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கர்நாடக மாநிலம் - பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் 06.02.2011 அன்று மதியம் 03.00 மணிக்கு, பெங்களூர் லால்பாக் பார்க் பூங்கா வெஸ்ட் கேட்டில் நடைபெற்றது.
பி.எம்.டி.அப்துர்ரஹ்மான் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இஸ்மாஈல் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். பின்னர், மன்றத்தில் புதிதாக இணைந்துள்ள எட்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - வரவு செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் வருடாந்திர வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் எஸ்.ஓ.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (குலாம்) சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
தீர்மானம் 2 - CFFCக்கு ஒத்துழைப்பு:
காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள Cancer Fact Finding Committee - CFFC க்கு நகர்நலன் கருதி மன்றம் தனது முழு ஒத்துழைப்பை வழங்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - எஸ்.கே. மறைவுக்கு இரங்கல்:
சிறந்த சமூக சிந்தனையாளரும், பொதுநல ஊழியருமான ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) அவர்களின் மறைவிற்காக அவர்களின் குடும்பத்தாருக்கு மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
அத்துடன், மர்ஹூம் அவர்களின் மண்ணறையை வல்ல அல்லாஹ் ஒளிமயமாக்கி வைக்கவும், மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை அவர்களுக்கு வழங்கவும் இக்கூட்டம் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 4 - புதுமண தம்பதியருக்கு வாழ்த்து:
அண்மையில் புதுமண வாழ்வு கண்டுள்ள மன்ற உறுப்பினர்கள் ஷேக் சுலைமான், ஷகீல் அஹ்மத், முஹம்மத் ஷிஹாபுத்தீன், அப்துல் காதிர் ஆகியோருக்கு மன்றம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறது.
அத்துடன், வல்ல அல்லாஹ் இத்தம்பதியருக்கு குறைவில்லா நல்வாழ்வையும், இருலோகத்திற்கும் பயன்தரும் கண்குளிர்ச்சியான மக்கட்செல்வங்களையும் நிறைவாகத் தந்தருள இக்கூட்டம் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 5 - வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து, மன்றத்தின் சார்பில் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் அடுத்த முகாமை விரைவில் நடத்திடுவதென்றும், இதுகுறித்து
(1) கே.கே.எஸ்.ஷெய்கு முஹம்மத் ஸாலிஹ்,
(2) எம்.ஏ.ஷேக்னா லெப்பை,
(3) எஸ்.அய்.முஹம்மத் முஹ்யித்தீன்,
(4) எம்.எஸ்.ஜாஹிர் ஹுஸைன்,
(5) ஏ.கே.ஷகீல் அஹ்மத்,
(6) ஜே.முஹம்மத் ரஃபீக்,
(7) இப்றாஹீம்,
(8) அப்துல்லாஹ்,
(9) எஸ்.எம்.என்.முஹம்மத் அப்துல் காதிர்
ஆகியோரடங்கிய குழு, இக்ராஃ நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து ஆவன செய்ய அதிகாரம் வழங்கி இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 6 - புதிய நிர்வாகக் குழு:
வரும் மார்ச் 31, 2012 வரையுள்ள பருவத்திற்கான மன்றத்தின் புதிய நிர்வாகக் குழு பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டது:-
ஆலோசனைக் குழு:
(1) ஜனாப் பி.எம்.டி.அப்துர்ரஹ்மான்
(2) ஜனாப் ஜாஹிர் ஹுஸைன்
(3) ஜனாப் ஜெய்த்
(4) ஜனாப் ஜபரூத்
(5) ஜனாப் இப்றாஹீம்
(6) ஜனாப் பி.பி.அப்துல் ரஹ்மான்
தலைவர்:
ஜனாப் எம்.எம்.அப்துர்ரஹீம்
துணைத்தலைவர்கள்:
ஜனாப் எல்.எம்.இ.அப்துல் காதிர்
ஜனாப் எஸ்.அய்.முஹம்மத் முஹ்யித்தீன்
செயலாளர்:
ஜனாப் வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை
துணைச் செயலாளர்கள்:
ஜனாப் கே.கே.எஸ்.ஷெய்கு முஹம்மத் ஸாலிஹ்
ஜனாப் எஸ்.எம்.என்.முஹம்மத் அப்துல் காதிர்
பொருளாளர்:
ஜனாப் எஸ்.ஓ.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
துணைப் பொருளாளர்கள்:
ஜனாப் டூட்டி செய்யித் முஹம்மத்
ஜனாப் வாவு முஹம்மத்
தீர்மானம் 7 - வேலைவாய்ப்புக்கு உதவி:
வேலைவாய்ப்பு தேடி பெங்களூருக்கு வந்துள்ள காயலர் ஒருவருக்கு தகுந்த வேலைவாய்ப்பை மன்றத்தின் சார்பில் விரைந்து பெற்றுத் தர தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 8 - அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை வரும் மே மாதம் 08ஆம் தேதியன்று, பெங்களூரு லால்பாக் கேட்டில் நடத்த இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில், 45 உறுப்பினர்களும், 6 பெண்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர் - சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.K.S.ஷெய்கு முஹம்மத் ஸாலிஹ்
மற்றும்
S.M.N.முஹம்மத் அப்துல் காதிர்,
துணைச் செயலாளர்கள்,
காயல் நல மன்றம்,
பெங்களூரு, கர்நாடக மாநிலம். |