மத்திய சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இன்று Plastic Waste (Management and Handling) Rules, 2011 என்ற சட்டத்தை வெளியிட்டது. இது Recycled Plastics Manufacture and Usage Rules,1999 என்ற சட்டத்திற்கு மாற்றாக வெளியிடப்பட்டுள்ளது.
இன்று இச்சட்டத்தினை வெளியிட்டு பேசிய மத்திய சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில் :-
முழுவதுமாக இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது சாத்தியமில்லை. உண்மையான சவால் முனிசிபல் குப்பை அகற்றும் முறையினை மேம்படுத்துவது.
இவ்வாறு அவர் கூறினார்.
இச்சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்:-
++ குட்கா, புகையிலை, பான் மசாலா போன்ற பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் விற்பதற்கு தடை
++ மீண்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கில் (Recycled Plastic) உணவு பொருட்களை பதப்படுத்த தடை
++ மீண்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குக்கு (Recycled Plastic) என தனி BIS அளவுகோல்
++ 40 மைக்ரோன் அளவுக்கு குறைந்த பிளாஸ்டிக் பைகளுக்கு அனுமதி இல்லை
முனிசிபல் நிர்வாகமே குப்பைகளை பராமரிக்க அதிகாரம் படைத்தது. அதற்காக முனிசிபல் நிர்வாகம் வழிமுறைகளை கொண்டுவரவேண்டும். இப்பணிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை பராமரிப்பதும் அடங்கும். இதில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்க மையங்கள் அமைப்பது , பிளாஸ்டிக் குப்பைகளை அதனை மீண்டும் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு சென்றடைப்பது போன்ற பொறுப்புகளும் அடங்கும்.
மேலும் திறந்தவெளியில் பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்க அனுமதிக்கக்கூடாது.
|