உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில், 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியர் தமது அரசுப் பொதுத்தேர்வுகளை தயக்கமின்றி எதிர்கொள்ளும் பொருட்டு பாடவாரியாகவும், அனைத்து தேர்வுகளுக்கும் வழிகாட்டும் வகையிலும் கல்வி ஒளிபரப்பு உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசை மூலமாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில், விரைவில் நடைபெறவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வை முன்னிட்டு, அம்மாணவ-மாணவியருக்காக இம்மாதம் இரண்டாம் வாரத்தில் கல்வி ஒளிபரப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த கலந்தாலோசனை நேற்றிரவு (05.02.2011) 08.30 மணிக்கு இக்ராஃ அலுவலகத்தில், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் எம்.ஏ.புகாரீ தலைமையில் நடைபெற்றது. ஒளிபரப்பு கால அட்டவணை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசனை செய்யப்பட்டது.
இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், செயலர் கே.எம்.டி.சுலைமான், துணைச் செயலர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் உடனிருந்தனர். |