தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை சீர்படுத்தும் ஆணையம் (TELECOM REGULATORY AUTHORITY OF INDIA - TRAI) டிசம்பர் 1 அன்று விளம்பர அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் குறித்த புதிய ஆணையை பிறப்பித்தது. Unsolicited Commercial Communications Regulations, 2010 என்ற அந்த ஆணை ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்திருந்தது.
நிறுவனங்கள் இம்மாற்றத்திற்கு தயார் ஆகவில்லை என்பதால், மேலும் ஒரு மாதம் அவகாசம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இவ்வாணை பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்திருந்தார்.
ஜனவரி 31 அன்று TRAI ஒரு புது உத்தரவினை பிறப்பித்தது. அதில் விளம்பர நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் எண் 70 இல் துவங்குவதற்கு பதிலாக 140 இல் துவங்கவேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.
இதனை அமல்படுத்த காலம் ஆகும் என்பதால் விளம்பர அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் குறித்த புது ஒழுங்குமுறை மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross