காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (I I M) சார்பில் 09.02.2011 அன்று இரவு 07.00 மணிக்கு மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெறவுள்ளது.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.அய்.அப்துல் மஜீத் மஹ்ழரீ, மவ்லவீ முஹம்மத் நூஹ் அல்தாஃபீ, மவ்லவீ ஜே.எஸ்.ரிஃபாஈ ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றவுள்ளனர்.
கூட்டத்தின் இறுதியில், தென்காசி ஃபஸ்லுத்தீன் வழங்கும் “மந்திரமா, தந்திரமா?” எனும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
கூட்டத்தில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் கலந்துகொள்ளுமாறும் நகர பொதுமக்களை அய்.அய்.எம். நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. |