க்த்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் அய்க்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகள், திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகத்துடன் இணைந்து மூன்றாமாண்டு புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை, 12.02.2011 சனிக்கிழமையன்று காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் நடத்துகின்றன.
இம்முகாமில், புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் கோவிந்தராஜன் - டாக்டர் சசிப்பிரியா குழுவினர் கலந்துகொண்டு, காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு இலவசமாக புற்றுநோய் பரிசோதனை செய்யவுள்ளனர்.
பெண்களுக்கான கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசியும் சலுகைக் கட்டணத்தில் இம்முகாமின்போது போடப்படவுள்ளது.
காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை - கே.டி.எம். தெரு சந்திப்பில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதையொட்டி அமைந்திருக்கும் மன்னர் ஃபேஷன் ஜுவல்லரியில் முகாமில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் அங்கேயே சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட அளவிலேயே பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாலும், குறைந்தளவிலேயே கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசிகள் கொண்டு வரப்படுவதாலும், முற்கூட்டியே விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து முற்கூட்டியே சமர்ப்பித்தவர்களுக்கு மட்டுமே முகாமின்போது பரிசோதனை செய்யப்படும் என காயல்பட்டினம் அய்க்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.அப்துல் வாஹித், கத்தர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
முகாம் குறித்து வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் மற்றும் விண்ணப்பப் படிவ மாதிரி பின்வருமாறு:-
|