சமீபத்தில் நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் சுருக்குமுறைத் திருத்தம், 2011 - ன் இறுதி வாக்காளர் பட்டியல்கள் கடந்த 10.01.2011 அன்று வெளியிடப்பட்டன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட விரும்பும் தகுதியுள்ள நபர்கள் தங்கள் வசிப்பிட முகவரிக்கான சான்றுடன் படிவம் 6-இல் (இரு பிரதிகள்) விண்ணப்பிக்கலாம். 18 - 24 வயதுடையோர் தங்கள் விண்ணப்பத்துடன் தங்கள் வயதிற்கான சான்றினையும் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலோ (அதாவது வட்டாச்சியர் அலுவலகங்கள் [Taluk Offices], நகராட்சிகள் [Municipalities]) அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலோ (மாநகராட்சிப் பகுதிகளில் மண்டல அலுவலகங்கள் [Zonal offices in corporation areas], மற்ற பகுதிகளில் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகங்கள் [Revenue Divisional Officers in other areas]) சமர்பிக்கலாம்.
வட்டாச்சியர் அலுவலகங்களிலுள்ள தலைமை உதவியாளர், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களிலுள்ள அலுவலக மேலாளர் ஆகியோர் இந்த தொடர் திருத்தத்தில் விண்ணப்பங்களைப் பெற நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
விண்ணப்பத்தை பெற்றதற்கு ஒப்புகை அளிப்பதோடு விண்ணப்பத்தின்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறியவும், தகுதியிருப்பின் புகைப்பட அடையாள அட்டையைப் பெறவும் விண்ணப்பதாரர் எந்த நாளில் வரவேண்டும் என்பதையும் அவர் தெரிவிப்பார்.
விண்ணப்பங்களின் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டோருக்கு ஒரு மாத காலத்தில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.
இதேபோல், தங்கள் பெயர் மற்றும் விவரங்களில் திருத்தங்கள் செய்யப்பட விரும்புவோர் படிவம் 8 - இல் (இரு பிரதிகள்) விண்ணப்பிக்கவேண்டும்.
தகவல்:
தலைமைத் தேர்தல் அதிகாரி,
தமிழ்நாடு. |