காயல்பட்டினம் ரஹ்மானிய்யா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கராத்தே திறனாய்வுத் தேர்வு இந்திய குடியரசு தினமான 26.01.2011 அன்று மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது.
ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் தலைமை தாங்கினார். டாக்டர் அபுல்ஹஸன், ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், அல்அமீன் துவக்கப்பள்ளி நிர்வாகி ஏ.சி.செய்துல்லாஹ், ஏ.எல்.எஸ்.ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் நிறுவனர் ஓவியர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா, ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, ஹாஜி கவிஞர் ஏ.ஆர்.தாஹா, சாளை முஹம்மத் அப்துல் காதிர், லக்கி மக்கீ, சீதக்காதி நூலக பொருளாளர் எஸ்.எச்.நியாஸ், ஜப்பான் இம்ரான், வி.டி.நூருல் அமீன், சல்மான், கவிஞர் ஷேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில், மலேஷிய நாட்டின் தேசிய கராத்தே பயிற்சியாளர் ஷிகான் டோனி பொன்னையா, காயல் கராத்தே மாஸ்டர் பேட்டை இர்ஃபான் ஆகியோர் மாணவ-மாணவியரின் கராத்தே திறனை நேரில் ஆய்வு செய்து, பச்சை மற்றும் நீல நிற பெல்ட், சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினர்.
ரஹ்மானிய்யா பள்ளி தலைமையாசிரியையின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
தகவல்:
A.L.S.மாமா,
கே.டி.எம்.தெரு, காயல்பட்டினம்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |