பாங்காக் சன் மூன் ஸ்டார் நிறுவனம் சார்பில் எழுவர் கால்பந்து ஒருதின போட்டிகள் சாக்கர் புகாரீ ஏற்பாட்டில், காயல்பட்டினம் அய்க்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் 29.01.2011 அன்று நடைபெற்றது.
காலரி பேர்ட்ஸ், எல்.கே.கய்ஸ், மக்காம் யுனைட்டெட், ஒய்.யு.எஃப்.கய்ஸ், கே.யுனைட்டெட், முஹைதீன் எஃப்.சி., வெஸ்டர்ன் கய்ஸ், ஹார்டி பாய்ஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், எல்.கே. கய்ஸ் - காலரி பேர்ட்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
இறுதிப்போட்டியில் இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் சமன் பிரிப்பு (டை-ப்ரேக்கர்) முறையில் காலரி பேர்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிக்கு லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன் ஹாஜி, வெற்றிக்கு முனைந்த அணிக்கு மாஷாஅல்லாஹ் செய்யித் ஆகியோர் பரிசுகளுக்கு அனுசரணையளித்திருந்தனர்.
சிறந்த கோல் கீப்பருக்கான சிறப்புப் பரிசு எல்.கே.கய்ஸ் அணியின் முஹைதீன், அதிக கோல் அடித்தவருக்கான பரிசு காலரி பேர்ட்ஸ் அணியின் ஃபைஸல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இப்பரிசுகளுக்கு பிஸ்மி கிஃப்ட் ஷாப் நிறுவனம் அனுசரணையளித்திருந்தது.
துவக்க ஆட்டத்தில் பாங்காக் சன் மூன் ஸ்டார் நிறுவனத்தின் அதிபர் எஸ்.எம்.எஸ்.ஹஸன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இறுதிப்போட்டியில் லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன் ஹாஜி, கேப்டன் ஹபீப், எஸ்.ஏ.ஜமால் என்ற ஜமால் மாமா ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஆட்ட வீரர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
போட்டி ஏற்பாடுகளை பாலப்பா, ஆசிரியர் எஸ்.பி.பி.புகாரீ, ராஸிக் ஹுஸைன், கலாமீ யாஸிர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். |