காயல்பட்டினம் மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளியில், அஷ்ஷெய்க் சாலார் மரைக்கார் வலிய்யுல்லாஹ், அஷ்ஷெய்க் சுலைமான் வலிய்யுல்லாஹ், மாதிஹுர்ரஸூல் அஷ்ஷெய்க் சதக்கத்துல்லாஹ் அப்பா வலிய்யுல்லாஹ், அஷ்ஷெய்க் ஷாம் ஷிஹாபுத்தீன் வலிய்யுல்லாஹ் ஆகிய நான்கு வலிமார்கள் கந்தூரி நிகழ்ச்சிகள் 27.01.2011 முதல் 29.01.2011 வரை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
அந்நாட்களில் தினமும் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி மஹான்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. தினமும் இஷா தொழுகைக்குப் பின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கந்தூரி தினத்தன்று, அஸ்ர் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகைக்குப் பின் திக்ர் மஜ்லிஸும் நடைபெற்றன. இஷா தொழுகைக்குப் பின், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் ஃபாழில் அஹ்ஸனீ சொற்பொழிவாற்றினார்.
நிகழ்ச்சிகளனைத்திலும், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தகவல்:
M.D.ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ B.E. |