காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் 20ஆம் ஆண்டு விழா 30.01.2011 அன்று மாலை 04.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் காவல் நிலைய அதிகாரி நட்டார் ஆனந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
துவக்கமாக பள்ளி தலைமை ஆசிரியை எம்.செண்பகவல்லி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் ஆண்டறிக்கையை தமிழாசிரியை தேன்மொழி தமிழிலும், ஆங்கில ஆசிரியை நிஷா கோல்டரியா ஆங்கிலத்திலும் வாசித்தனர்.
பின்னர் சிறப்பு விருந்தினர் என்.நட்டார் ஆனந்தி மாணவ-மாணவியருக்கு அறிவுரை வழங்கியதோடு, சென்ற கல்வியாண்டில் 10ஆம், 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவியருக்கு பணப்பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார், ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர், ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ ஆகியோர் பள்ளியின் 10ஆம், 12ஆம் வகுப்பு ஆசிரியையருக்கு பணப்பரிசுகள் வழங்கினர்.
வகுப்பு வாரியாக அதிக புள்ளிகள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுக் கேடயங்களும் வழங்கப்பட்டன. பின்னர் மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இறுதியாக ஆசிரியை வேணி லெட்சுமி நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
தகவல் மற்றும் படங்கள்:
வீனஸ் ஸ்டுடியோ,
L.K.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |