இந்திய ரயில்வே முன்பதிவு (Advance Reservation) முறையில் தட்கல் (Tatkal) வழிமுறை உள்ளது. இதன்படி ஒவ்வொரு ரயிலிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தட்கல் பிரிவின் கீழ் இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன (Quota). இதற்க்கான முன்பதிவு, பயண நாளுக்கு இருதினங்கள் முன் துவங்கும். இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
தட்கல் முறையில் பெறப்பட்ட டிக்கெட்டில் பயணம் செய்வோர், பயண வேளையில் புகைப்படம் கொண்ட அடையாள அட்டை (Photo Identity Card) கொண்டு செல்லவேண்டும் என்ற விதி சில மாதங்களுக்கு முன்னர் தளர்த்தப்பட்டது. இதனை சில இடைதரகர்கள் தவறாக பயன்படுத்துவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்திய ரயில்வே, மீண்டும் பயண வேளையில் அடையாள அட்டையை கொண்டு செல்வதை கட்டாயம் ஆக்கியுள்ளது. இது வரும் பிப்ரவரி 11 முதல் அமலுக்கு வருகிறது.
பதிவு செய்யும் போது - அடையாள அட்டையை சமர்பிக்க தேவையில்லை. பயணிக்கும் போது மட்டும் அடையாள அட்டையை பரிசோதனையாளரிடம் காண்பிக்க வேண்டும். ஒருவருக்கு மேல் ஒரே டிக்கெட்டில் பயணித்தால், அதில் ஒருவர் மட்டும் அடையாள அட்டையை காண்பித்தால் போதுமானது. அடையாள அட்டை - அசல் (Original) மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நகல் (Duplicate/Photocopy) ஏற்றுக்கொள்ளப்படாது.
ஏற்றுக்கொள்ளப்படும் புகைப்படம் கொண்ட அடையாள அட்டைகள் வருமாறு:-
(1) தேர்தல் ஆணையரால் வழங்கப்பட்ட வாக்களர் அட்டை (Voter ID)
(2) பாஸ்போர்ட்
(3) வருமான வரி அட்டை (PAN Card)
(4) வாகன ஓட்டுனர் உரிமம் அட்டை (Driving License)
(5) மத்திய/மாநில அரசாங்கங்களால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை
(6) பள்ளிக்கூடம்/கல்லூரி மூலம் மாணவர்கள் பெற்ற புகைப்பட அடையாள அட்டை
(7) அரசாங்க வங்கிகள் வழங்கிய பாஸ்புக்கில் உள்ள புகைப்படம்
(8) புகைப்படம் கொண்ட கிரெடிட் கார்டு
|