தூத்துக்குடியில் கலசலிங்கம் பல்கலைக் கழகம் சார்பில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ஜெயிப்பது எப்படி என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. அறிவியல் மாணவர்களுக்கு தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியிலும், கலைப்பிரிவு, வணிகப்பிரிவு மாணவர்களுக்கு கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியிலும் தனித்தனியாக நடந்தது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரன் துவக்கி வைத்து பேசினார்.
கலசலிங்கம் பல்கலைக் கழக வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணை வேந்தர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பதிவாளர் டாக்டர் வாசுதேவன், முதன்மை கல்வி அலுவலர் விஷ்ணுபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை இயக்குநர் பேரா சிரியர் வாசுதேவன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர்கள் தமிழ்செல்வி, ஜெயராமன், முருகன் ஆகியோர் பேசினர்.
அறிவியல், கணித, கணினி ஆசிரியர்கள் மாணவ மாணவியருக்கு தேர்வு வழிகாட்டி தகவல்கள், சுருக்க முறைகள், தேர்வுகளை அணுகுதல், உளவியல் பயிற்சி மற்றும் சக்சஸ் டிப்ஸ் உள்ளிட்டவை வழங்கினர். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பேராசிரியர் தில்லையரசு நன்றி கூறினார்.
மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரன் பேசுகையில், இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் மாநில முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவியரின் வீட்டிற்கு எனது குடும்பத்தினருடன் உணவருந்த வருவேன். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது வீட்டில் விருந்தளிப்பேன் என்றார். இதனை கேட்ட மாணவ, மாணவியர் கைதட்டி வரவேற்றனர்.
தகவல்:
தினகரன்
|