முஸ்லிம் சமுதாயத்தினரின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி முதலமைச்சர் கருணாநிதி 15.9.2007 அன்று ஆணையிட்டு, நடைமுறைப்படுத்திவரும் இடஒதுக்கீட்டின்படி, இஸ்லாமிய சமுதாயத்தினர் தமிழக அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் உரிய இடங்களைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.
இந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்வதற்காகவும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதற்காகவும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்களைத் தலைவராகவும், பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோர் - சீர் மரபினர் - சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளர் அவர்களைச் செயல் உறுப்பினராகவும், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுத் தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், சிறுபான்மையினர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்றை அமைத்து முதலமைச்சர் கருணாநிதி நேற்று (29.1.2011) ஆணையிட்டுள்ளார்.
செய்தி வெளியீடு:
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை - 9.
தகவல்:
அ.முஜீப்,
அரசு நூலகர். |