அரசுப் பொதுத்தேர்வு காலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களை ஈடுபடுத்தப் போவதாக 18.12.2010 அன்று, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்ற நகரின் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தகவல் பெறப்பட்டது.
இதுபோன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்துதவுமாறு தமிழக கல்வியமைச்சருக்கு கடிதம் மூலம் கோருவதென இக்24.12.2010 அன்று நடைபெற்ற இக்ராஃ கல்விச் சங்க செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், 27.01.2011 அன்று (நேற்று) தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு இக்ராஃ கடிதம் அனுப்பியுள்ளது. தேர்வுக் காலங்களில் இதுபோன்ற அரசுப் பணிகளுக்கு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால் மாணவ-மாணவியரின் கல்வித்தரம் பாதிப்படையும் என்றும், எனவே அதுபோன்ற நடவடிக்கைகளை குறிப்பாக தேர்வு நேரங்களில் தவிர்த்திடுமாறும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
அக்கடிதத்தின் நகல் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.தர்வேஷ் முஹம்மத்,
நிர்வாகி,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம்.
இச்செய்தியின் வாசகங்கள் சிறிது திருத்தப்பட்டுள்ளது. |