இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் அவை இருக்கும் நகரங்களின் பெயரிலேயே அழைக்கப்படுவது வழக்கம். இருப்பினும் சில சிறப்பு சூழ்நிலைகளில் மறைந்த தலைவர்கள் பெயர்கள் துறைமுகங்களுக்கு சூட்டபட்டும் உள்ளன.
தூத்துக்குடி துறைமுகத்துக்கு V.O. Chidambaranar Port Trust என பெயர் சூட்டி மத்திய அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் என்ற ஊரில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை பெயரினை தூத்துக்குடி துறைமுகத்திற்கு வழங்க கோரிக்கைகள் விடப்பட்டன. வ.உ.சிதம்பரம் பிள்ளை Swadeshi Steam Navigation Company என்ற பெயரில் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை துவக்கியவர். இந்நிறுவனமே இந்தியரால், இந்தியாவில் முதலில் நிறுவப்பட்ட நிறுவனமாகும். மேலும் இந்நிறுவனம் 1906 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு கப்பல் சேவை முதன்முதலாக இயக்கியது.
வ.உ.சிதம்பரம் பிள்ளை - தமிழ் அறிஞர், எழுத்தாழர், பேச்சாளர், தொழிற்சங்க தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர். ஆகவே இப்புகழ்களுக்கு உரித்த வ.உ.சிதம்பரம் பிள்ளை பெயரினை தூத்துக்குடி துறைமுகத்திற்கு வழங்கி நாடு அவர் செய்த தியாகத்தை நினைவு கூறுகிறது.
3. Tuticorin Port name changing posted bymohamed ibrahim (Abu Dhabi)[30 January 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2449
To avoid this issue, better to keep the name of its Place or a common word like Tuticorin Port or Port Pearl etc., Pearl Harbor is a famous Port name, but we cann't select it.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross