பாப்ரி மஸ்ஜித் குறித்து சென்ற ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் இன்று (ஜனவரி 27) சென்னை / மதுரை உயர்நீதிமன்றங்களின் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறது. இதன் நேரடி ஒளிபரப்பினை www.tntj.net மற்றும் www.onlinepj.com இணையதளங்களில் காணலாம்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை அயோத்தி வழக்கில் செப்டம்பர் 30 அன்று தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பு கீழ்க்காணுமாறு அமைந்திருந்தது.
* சிலை இருப்பது ராமர் பிறந்த இடமே (2-1 தீர்ப்பு)
* அயோத்தி நிலத்தை 3 பங்காக (சுன்னி வக்ஃப் வாரியம், ஹிந்து நிர்மோஹி அகாரா, ராம் லல்லா கட்சி) பிரித்து கொள்ள வேண்டும் (2-1 தீர்ப்பு)
* சுன்னி வக்ஃப் வழக்கு தள்ளுபடி (2-1 தீர்ப்பு)
இத்தீர்ப்பினை எதிர்த்து உத்தர் பிரதேஷ் மாநில சுன்னி வக்ஃப் வாரியம் டிசம்பர் 14 அன்று டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு (Special Leave Petition - SLP) செய்துள்ளது.
ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாமல் ஒரு சாராரின் நம்பிக்கையின் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பல முஸ்லிம் மற்றும் மதசார்ப்பற்ற அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross