தாமாக முன்வந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தம் வாழ்வியலாக்கிக் கொள்ளும் ஆண் - பெண்களுக்கு மூன்று மாத காலம் இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியைப் போதிப்பதற்காக, காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவில் செயல்பட்டு வருகிறது சமூக நல்லிணக்க மையம் என்ற தஃவா சென்டர்.
இஸ்லாமைத் தழுவும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு முறையான தங்குமிட வசதிகளை நிரந்தரமாக ஏற்படுத்திக் கொடுத்து கல்வி கற்பிப்பதற்காக, காயல்பட்டினம் குட்டியாபள்ளி வளாகத்தையொட்டி வடபகுதியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
அக்கட்டிடத்தின் ஒரு பகுதியான பெண்கள் பிரிவு கட்டுமானப் பணிகள் நிறைவுற்றுள்ளதையடுத்து, நாளை (26.01.2011) மாலையில் பெண்கள் பிரிவு துவக்க விழா நடைபெறுகிறது.
மயிலாடுதுறை நகரைச் சார்ந்த பிரச்சாரகர் ஃபாத்திமா ஜன்னாஹ் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தஃவா சென்டர் மேலாளர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா மேற்பார்வையில், சென்டர் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
புதிதாக இஸ்லாமைத் தழுவியோருக்கான கல்விப் பிரிவு அப்பா பள்ளித் தெருவிலுள்ள - தற்சமயம் மிகவும் பழுதடைந்துள்ள கட்டிடத்திலும், குட்டியப்பா பள்ளியிலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. |