இந்தியாவில் இளம்பிள்ளைவாத நோயை (போலியோ) முற்றிலும் அழித்திடும் நோக்கில், நாடு முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இருமுறை போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் நேற்றும் நாடு முழுவதும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டது. காயல்பட்டினம் நகரில் 14 முகாம்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. நேற்று காலை 07.00 மணிக்குத் துவங்கிய முகாம் மாலை 05.00 மணிக்கு நிறைவுற்றது.
முகாமின் இறுதியில் காயல்பட்டினம் நகரில் 5 வயதிற்குட்பட்ட 2820 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. முகாம் வாரியாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை விபரம் பின்வருமாறு:-
ஓடக்கரை - 169
எல்.கே.மேனிலைப்பள்ளி - 243
அல்அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி - 194
ரெட் ஸ்டார் சங்கம் - 258
இளைஞர் அய்க்கிய முன்னணி - 173
தீவுத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி - 72
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு - 245
கோமான்தெரு பெண்கள் தைக்கா - 253
கடையக்குடி - 80
அல்அமீன் இளைஞர் சங்கம் - 390
கற்புடையார் பள்ளி வட்டம் - 150
ரஃப்யாஸ் ரோஸரி பாலர் பள்ளி - 163
அரசு மருத்துவமனை - 282
கீழலெட்சுமிபுரம் - 115
வெளியூர் குழந்தைகளுக்காக சாலையோரங்களில் வழங்கப்பட்டது - 33
மேற்கண்டவாறு முகாம் வாரியாக குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தில் முகாம் ஏற்பாடுகள் குறித்து காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர்கள் ஏ.துளசிராமன், ஆனந்தராஜ் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில், காயல்பட்டினத்தில் 14 முகாம்களிலும் பொது நல அமைப்பினர் நிறைவான ஏற்பாடுகளைச் செய்து தந்தனர் என்றும், பள்ளிவாசல்களிலுள்ள ஒலிபெருக்கி மூலம் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து பொதுமக்களுக்கு மீண்டும் மீண்டும் அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர் என்றும், எனினும் கடந்த காலங்களை விட இம்முறை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளதாகவும் தெரிவித்தனர்.
ரெட் ஸ்டார் சங்கத்தில் ஒரு குழந்தைக்கு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.அய்.ரஃபீக் போலியோ சொட்டு மருந்து கொடுத்த காட்சி
இளைஞர் அய்க்கிய முன்னணியில், அதன் நிறுவனர்களில் ஒருவரான எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டி.எம்.) ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கிறார் |