தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சார்ந்த ஃபாரூக் அவர்களின் மகன் அப்துல்லா. இவர் தனது தந்தை மற்றும் சகோதரர்களுடன் இணைந்து ஹோட்டல் பணியை கவனித்து வருகிறார். நாள் முழுவதும் ஹோட்டல் பணியில் ஈடுபட்டாலும் அஞ்சல் தலை, நாணயங்களை சேகரிப்பது மற்றும் அபூர்வ பொருட்கள் எது கிடைத்தாலும் அதை சேகரித்து மெருகேற்றி பத்திரப்படுத்தி வருகிறார் இவர். இவரிடம் 178 நாடுகளைச் சார்ந்த 3000 நாணயங்களும் , 212 நாடுகளைச் சேர்ந்த 8500 அஞ்சல் தலைகளும் உள்ளன.
வித்தியாசமான தேங்காய், பழங்கள், காய்கறிகள் மட்டுமின்றி வித்தியாசமாக கிடைக்கும் பொருட்களை சேகரிப்பது இவரது பொழுது போக்காகும். இவர் சேகரித்து வைத்த நாணயங்களில் சில அபூர்வ நாணயங்கள் உள்ளன. அதாவது ஆசியாவில் வணிகம் செய்யும் நோக்குடன் இங்கிலாந்தில் 1600ல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி துவக்கப்பட்டது.
இதைப் பின்பற்றி ஹாலந்து வர்த்தகர்களும் தங்கள் கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்தை 1602ல் துவக்கினர். இது ஹாலந்து மொழியில் Veerenigde OstIndische Campagnie (VOC) எனப் பெயர் பெற்றது. அதாவது ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி ஆகும். இவர்கள் இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஆசிய பிரதேசத்தை கிழக்கிந்திய எனக் குறிப்பிட்டனர். ஹாலந்து நாணயங்களில் காணப்படும் VOC என்பது வர்த்தக நிறுவனத்தைக் குறிக்கும்.
1796ல் ஆங்கிலேயர்களால் இந்தியாவிலிருந்து ஹாலந்து வர்த்தக நிறுவனம் அகற்றப்பட்டது. இந்த நிறுவனம் பயன்படுத்திய நாணயங்களை அப்துல்லா சேகரித்து பாதுகாத்து வருகிறார்.
படையெடுக்கும் இது பாம்பு அல்ல!
அப்துல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ள முருங்கைக்காய்
|