தமிழகத்தில் வரும் மார்ச் முதல் மின் கட்டணம் மாதந்தோறும் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில், வீட்டு உபயோக மின்சாரத்திற்கு, இரு மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்த கடைசி தேதியில், அதிக கூட்டம் வருவதால் நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட உள்ளது.
இதன்படி, 2ம் தேதிக்குள் மின்வாரிய கணக்கீட்டாளர்கள் கணக்கெடுப்பர். கணக்கெடுத்த தேதியை அட்டையில் குறிப்பிடுவர். இதைத்தொடர்ந்து, மாதந்தோறும் 20ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். சென்னையில் ஒரு பகுதியிலும், கோவை, ஈரோடு மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இம்முறை செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் திருப்தியாக இருப்பதால்,வரும் மார்ச் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
தகவல்:
www.tutyonline.net |