புற்றுநோய் மருத்துவ நிபுணரும், விஞ்ஞானியுமான டாக்டர் மாசிலாமணியுடன் தம்மாம், ஜித்தா, ரியாத் காயல் நல மன்றத்தினர் கலந்தாலோசனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து சஊதி அரபிய்யா - ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
புற்றுநோய் மருத்துவ நிபுணரும், விஞ்ஞானியுமான டாக்டர் மாசிலாமணியுடன் வளைகுடா காயல் நல மன்றத்தினர் கலந்தாலோசனைக் கூட்டம் 13.01.2011 வெள்ளிக்கிழமை இரவு 06.00 மணிக்கு, ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் இல்லத்தில் நடைபெற்றது.
ரியாத் காஹிர் பைத்துல்மால் தலைவர் ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்டோர் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர், கூட்டத்தின் முக்கிய நோக்கம் குறித்து ரியாத் காஹிர் பைத்துல்மால் செயலர் ஹாஜி ஏ.எச்.முஹம்மத் நூஹ் சுருக்கவுரையாற்றினார்.
டாக்டர் இத்ரீஸ் உரை:
தொடர்ந்து, காயல்பட்டினத்தில் நிலவி வரும் புற்றுநோய் பாதிப்புகள் பற்றியும், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஊரின் சுற்றுப்புறச் சூழ்நிலைகள் பற்றியும், தம்மாம் காயல் நலமன்றத் தலைவர் டாக்டர் ஏ. முஹம்மது இத்ரீஸ் அவர்கள் மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் எடுத்துச் சொன்னார்கள்.
விஞ்ஞானி டாக்டர் மாசிலாமணி உரை:
அவ்வுரையை முழுமையாகக் கேட்டறிந்த விஞ்ஞானி டாக்டர் மாசிலாமணி அவர்கள், பயன்தரும் நீண்ட கருத்துரை வழங்கி கூட்டத்தில் கலந்துகொண்டோரை உற்ச்சாகப்படுத்தியதோடு, “நீங்கள் செய்யவிருக்கும் சமூக நலப்பணிகளுக்கு என்னாலியன்ற உடல் உழைப்பையும், ஆலோசனைகளையும் என்றும் வழங்குவேன்” என உறுதியளித்தார்.
புற்றுநோயாளிகள் விபர சேகரிப்பு:
விஞ்ஞானி அவர்கள் நம்மிடம் முன்வைத்த மிக முக்கிய செயல்திட்டங்களில் முதன்மைப் பணியாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்கள் மற்றும் தற்போது அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் புள்ளி விபரங்களை மிகத்துரிதமாக சேகரிக்க வேண்டுமென நம்மை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில், அதற்கான ஆயத்தப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகிறோம்.
அதனைத் தொடர்ந்து பெரியபட்டினத்தைச் சார்ந்த சகோதரர்கள் தங்களது ஊரில் விஞ்ஞானி டாக்டர் மாசிலாமணி அவர்களோடு இணைந்து தாங்கள் செயல்படுத்திய சமூக நலப்பணிகளையும், அவற்றின் மூலம் கிடைத்த பயன்களையும் பற்றி கூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர்.
புதிதாக இணைக்கப்பட்ட படம்:-
கூட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பதிவு செய்தோர்:
டாக்டர் எஸ்.எம்.செய்யது இப்றாஹீம் அவர்கள்
(மருத்துவ ஆலோசகர் - கே.பி.எம். ரியாத்)
ஹாஜி எஸ்.ஏ.ரஃபீக் அஹ்மத் அவர்கள்
(செயலாளர் - காயல் நற்பணி மன்றம். தம்மாம்)
ஹாஜி செ.இ.செய்யித் இப்றாஹீம் அவர்கள்
(உறுப்பினர் - காயல் நற்பணி மன்றம், தம்மாம்)
டாக்டர் ஏ.ஜியாத் அபூபக்கர் அவர்கள்
(மருத்துவ ஆலோசகர் - காயல் நற்பணி மன்றம், ஜித்தா)
டாக்டர் முஹம்மத் அப்துல் காதிர் அவர்கள்
(மருத்துவ ஆலோசகர் - கே.பி.எம்., ரியாத்)
ஜனாப் சஜ்ஜாருத்தீன் அவர்கள் (பெரியப்பட்டினம்)
ஜனாப் என்.ரஹ்மத் அலி அவர்கள் (பெரியப்பட்டினம்)
ஹாஜி பி.எம்.எஸ்.சதக்கதுல்லாஹ் அவர்கள்
(செயற்குழு உறுப்பினர் – காயல் நற்பணி மன்றம், தம்மாம்)
ஹாஜி கூஸ் எஸ்.ஏ.டி.முஹம்மத் அபூபக்கர் அவர்கள்
(ஆலோசகர் - கே.பி.எம். ரியாத்)
ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் அவர்கள்
(துணைத்தலைவர் - கே.பி.எம். ரியாத்)
ஹாஜி எம்.ஏ.ஷெய்கு தாவூத் இத்ரீஸ் அவர்கள்
(துணைச் செயலாளர் - கே.பி.எம். ரியாத்)
ஹாஜி முஹம்மத் ஹஸன் அவர்கள்
(செயற்குழு உறுப்பினர் - காயல் நற்பணி மன்றம். தம்மாம்)
ஹாஜி எம்.ஓ.எஸ்.அப்துற்றஹீம் அவர்கள்
(செயற்குழு உறுப்பினர் - கே.பி.எம். ரியாத்)
ஹாஜி ஒய்.ஏ.எஸ்.ஹபீப் முஹம்மத் முஹ்ஸின் அவர்கள்
(செயற்குழு உறுப்பினர் - கே.பி.எம். ரியாத்)
ஹாஜி எச்.ஏ.உமர் ஃபாரூக் ஃபாஸீ அவர்கள்
(உறுப்பினர் - கே.பி.எம். ரியாத்)
மின்ஹாஜ் அவர்களின் இல்லத்தாரது சிறப்பான ஏற்பாடுகளுடன் கூடிய விருந்துபசாரத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
குறிப்பு: இன்னும் அதிக விபரங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஜி A.H.முஹம்மத் நூஹ்,
செயலாளர்,
காஹிர் பைத்துல்மால்,
ரியாத், சஊதி அரபிய்யா. |