வருகிற சட்டமேலவைத் தேர்தலுக்கான ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு தெற்கு பட்டதாரிகள் தொகுதியில் 1,04,887 வாக்காளர்களும், ஆசிரியர்கள் தொகுதியில் 20,886 வாக்காளர்களும் உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு.ஜெயராமன் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு தெற்கு பட்டதாரி தொகுதி மற்றும் தெற்கு ஆசிரியர்கள் தொகுதி ஆகியவற்றிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை இன்று (20.01.2011) வெளியிட்டார்.
இதில் தமிழ்நாடு தெற்கு பட்டதாரிகள் தொகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் 16579 ஆண் வாக்காளர்களும், 9509 பெண் வாக்காளர்களும் (மொத்தம் 26088), கன்னியாகுமரி மாவட்டத்தில் 12388 ஆண் வாக்காளர்களும், 11562 பெண் வாக்காளர்களும் (மொத்தம் 23950), தூத்துக்குடி மாவட்டத்தில் 10367 ஆண் வாக்காளர்களும், 9010 பெண் வாக்காளர்களும் (மொத்தம் 19377), விருதுநகர் மாவட்டத்தில் 12274 ஆண் வாக்காளர்களும், 7805 பெண் வாக்காளர்களும் (மொத்தம் 20079), தேனி மாவட்டத்தில் 9984 ஆண் வாக்காளர்களும், 5409 பெண் வாக்காளர்களும் (மொத்தம் 15393) உள்ளனர். ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு தெற்கு பட்டதாரிகள் தொகுதியில் மொத்தம் 1,04,887 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும், தமிழ்நாடு தெற்கு ஆசிரியர்கள் தொகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் 2772 ஆண் வாக்காளர்களும், 2798 பெண் வாக்காளர்களும் (மொத்தம் 5570), கன்னியாகுமரி மாவட்டத்தில் 2341 ஆண் வாக்காளர்களும், 3157 பெண் வாக்காளர்களும் (மொத்தம் 5498), தூத்துக்குடி மாவட்டத்தில் 1495 ஆண் வாக்காளர்களும், 2310 பெண் வாக்காளர்களும் (மொத்தம் 3805), விருதுநகர் மாவட்டத்தில் 1805 ஆண் வாக்காளர்களும், 1888 பெண் வாக்காளர்களும் (மொத்தம் 3693), தேனி மாவட்டத்தில் 1175 ஆண்வாக்காளர்களும், 1145 பெண் வாக்காளர்களும் (மொத்தம் 2320) உள்ளனர். ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு தெற்கு ஆசிரியர்கள் தொகுதியில் மொத்தம் 20,886 வாக்காளர்கள் உள்ளனர்.
தகவல்:
www.tutyonline.net
|