காயல்பட்டினம் பரிமார் தெருவில் அடங்கியிருக்கும் மஹான் ஷெய்கு நூருத்தீன் வலிய்யுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி நேற்று(20.01.2011) நடைபெற்றது.
நேற்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் மஹான் அவர்களின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது. மாலையில் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. மஃரிப் தொழுகைக்குப் பின் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இஷா தொழுகைக்குப் பின், மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஃபாஸீ, மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித சொற்பொழிவாற்றினார்.
கடைப்பள்ளி இமாம் முஹம்மத் இஸ்மாயீல் புகாரீ தங்ஙள் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. கலந்துகொண்ட அனைவருக்கும் நேர்ச்சை வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நகரின் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
பின்னர் காயல்பட்டினம் முஹ்யித்தீன் மாணவர் மன்றம் சார்பில், மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ தலைமையில், மஹான் அவர்களின் மண்ணறை மீது போர்வை போர்த்தப்பட்டு, ஸலாம் பைத் பாடப்பட்டது.
|