கே.வி.ஏ.டி.புஹாரி ஹாஜி அறக்கட்டளை வருடா வருடம் நடத்தும் தாய் திருநாட்டின் 61வது குடியரசு தின கொடியேற்று விழாவிற்கு அழைக்க விருக்கின்ற விருந்தினர்கள் மற்றும் கொடியேற்றம் இடம் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் ஆலிஜனாப் அல்ஹாஜ் என்.டி.சாலிஹ் ஆலிம் அவர்கள் தலைமையில் புதுக்கடைதெரு கண்ணாடி ஆலிம் இல்லத்தில் அறக்கட்டளையின் டிரஸ்டி ஹாஜி கே.வி.ஏ.டி.செய்யிது அஹமது கபீர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் மன்னர் பாதுல் அஷ்ஹப் அவர்கள் நடைபெற இருக்கிற குடியரசு தினவிழாவில் அழைக்க விரும்பும் விருந்தாளிகள் அன்றைய தினம் செய்யப்பட இருக்கிற ஏற்பாடுகள் மாணவ அணி வகுப்புகள், கொடியேற்றம், தலைமை, முன்னிலை வகிப்பாளர்கள் பற்றிய கருத்துக்களை முன் வைத்தார். கே.வி.ஏ.டி.புஹாரி ஹாஜி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஜனாப் அப்துல் ரசாக் அவர்கள், துணை ஒருங்கிணைப்பாளர் ஜனாப் மீராசாகிபு அவர்கள் உயர்மட்ட குழு உறுப்பினர் ஹாஜி எம்.என்.எல்.சுலைமான் அவர்கள், சேஃப்ஹேண்ட் ஜனாப் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள், ஜனாப் தைக்கா முஹம்மது சுல்தான் அவர்கள் (தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் சங்கம்) கே.வி.ஏ.டி.அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினர் ஜனாப் எம்.எல்.சேக்னா லெப்பை அவர்கள், எம்.யூ.அமானுல்லா அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு மேலாளர் ஆஷக் கே.வி.ஏ.டி.அறக்கட்டளை.
ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உயர்திரு அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. அவர்களை அழைப்பதென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
தலைமை அல்ஹாஜ் எம்.எம்.உவைஸ் அவர்களும், முன்னிலை காயல்பட்டணம் நகராட்சி தலைவர் அல்ஹாஜ் வாவு அப்துல் ரஹ்மான் அவர்களும் திரு.செந்தில் குமார் அட்வகேட் நோட்டரிபப்ளிக், திருச்செந்தூர், ஐக்கிய சமாதான பேரவை நிறுவனர் ஆலிஜனாப் மௌலவி எம்.என்.ஹாமித் பக்ரி மன்பயி அவர்கள், கொடியேற்று விழாவை இவ்வருடம் சீதக்காதி திடலில் வைத்து நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
உள்ளுர் பொதுநல அமைப்புகள், சமுதாய இயக்கங்கள் மற்றும் நகர பிரமுகர்களையும் இவ்விழாவிற்கு நேரில் அழைப்பதென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
பசுமைபடை என்.எஸ்.எஸ். ஸ்கவுட் என்.சி.சி. ரெட் கிராஸ் அகிய தொண்டு நிறுவனங்களை அழைத்து விமர்சையாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
நன்றியுரை ஜனாப் எம்.எல்.சேக்னா அவர்கள்.
|