காயல்பட்டினம் மகுதூம் தெரு - குத்துக்கல் தெரு முனையில், புதுக்கடைத் தெரு - குறுக்கத் தெரு ஆகிய தெருக்களை அரவணைத்தவாறு அமைந்துள்ளது மகுதூம் பள்ளிவாசல்.
இட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இப்பள்ளிவாசலின் பழைய கட்டிடம் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய கட்டிட கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தரைதளப் பணிகள் ஓரளவுக்கு முற்றுப்பெற்றுள்ளதையடுத்து, முதல் தளப்பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதல் தளத்தில் கான்க்ரீட் மேற்கூரை அமைப்புப் பணிகள் நேற்று நடைபெற்றது.
பள்ளி கட்டிடப் பணிகள் - குறுக்கத் தெருவிலிருந்து பதியப்பட்ட காட்சி...
கட்டிடப் பணிகள் குறித்து அப்பள்ளியின் கட்டிடப் பணிக்குழு சார்பில் அதன் தலைவர் ஹாஜி அரிஸ்டோ இக்பால் தெரிவித்துள்ளதாவது:-
அன்புடையீர அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
இறையருளால் நமது மகுதூம் பள்ளிவாசல் கட்டிடப் பணிகள் பல்வேறு சிரமங்களுக்கிடையில் நடைபெற்று வருகிறது. தரைதளப் பணிகள் ஓரளவுக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் தள கட்டுமானப் பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகிறது. மஹல்லாவாசிகள் மட்டுமின்றி நகர பொதுமக்கள் மற்றும் பலரின் பொருளாதார ஒத்துழைப்புகளைக் கொண்டே இக்கட்டுமானப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
ஓரளவுக்கு முடிவுற்றுள்ள தரைதளப் பணிகள்...
முதல் தளத்தின் மேற்கூரைக்கான கான்க்ரீட் பணிகள்...
பள்ளி புதிய கட்டிடம் - வடமுனை (மேலிருந்து கீழாக)
பள்ளி புதிய கட்டிடம் - வடமுனை - படம் 2 (மேலிருந்து கீழாக)
பள்ளி புதிய கட்டிடம் – வடமேற்கு முனை (கீழிருந்து மேலாக)
பள்ளி புதிய கட்டிடம் – தென்மேற்கு முனை (கீழிருந்து மேலாக)
இப்பணிகளை இன்னும் துரிதப்படுத்தி விரைவாக நிறைவேற்றிடும் பொருட்டு ஒரு முஸல்லாவுக்கு (தொழுமிடத்திற்கு) ரூ.5000 (ஐந்தாயிரம் ரூபாய்) செலவாகும் என்று கணக்கிட்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி ஜமாஅத்தார், மஹல்லாவாசிகள் உள்ளிட்ட அனைத்து காயலர்களும், பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளில் ஆர்வம் கொண்டுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் இதையே தங்களிடம் நாங்கள் நேரில் தரும் வேண்டுகோளாக ஏற்று, தங்களால் இயன்றளவுக்கு பல முஸல்லாக்களுக்கு நிதியுதவியை வாரி வழங்கிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
ஒரு முஸல்லாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவான அளவில் நன்கொடை தர விரும்புவோரும் தயங்காமல் இந்த வகைக்காக உதவலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்கொடைகள் தர விரும்புவோர்,
Bank Account No. 2081267035,
Central Bank of India,
Kayalpatnam Branch
என்ற வங்கிக் கணக்கிற்கு டி.டி.யாகவோ, காசோலையாகவோ அனுப்பித் தரலாம் என்றும், நேரில் சந்தித்து நன்கொடையளிக்க விரும்புவோர், பள்ளியை ஒட்டியுள்ள ஃபாயிஸீன் சங்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பள்ளி கட்டிடப்பணிக் குழு அலுவலகத்தில் தமது நன்கொடைகளை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நம் யாவரின் நல்லமல்களையும் ஏற்று ஈருலகிலும் நன்மைகளை வாரி வழங்கியருள்வானாக ஆமீன்.
தற்சமயம், ஃபாயிஸீன் சங்க வளாகத்தில் ஐவேளை தொழுகை நடைபெற்று வருகிறது. பள்ளியின் தரை தள கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவுற்றதும், இன்ஷாஅல்லாஹ் விரைவில் பள்ளியின் தரை தளத்தில் தொழுகை நடைபெறும் என்பதையும் அன்புடன் அறியத் தருகிறோம்.
இவ்வாறு மகுதூம் பள்ளி கட்டிடப் பணிக்குழு தலைவர் ஹாஜி அரிஸ்டோ இக்பால் தெரிவித்துள்ளார்.
தகவல்:
மகுதூம் பள்ளி கட்டிடப் பணிக்குழு சார்பாக,
முஹம்மத் இப்றாஹீம் (48),
காயல்பட்டினம். |