சவுதி அரேபியா தலைநகர் ரியாதில் உள்ள Kannanoor Muslim Cultural Committee ஏற்பாட்டில், Modern International Indian School வளாகத்தில் வைத்து, கடந்த அக்டோபர் 29, 2010 அன்று மாணவர்களுக்கான கிராஅத் போட்டிகள் நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக (Sub-Juniors, Juniors, Seniors) நடைபெற்ற இப்போட்டிகளில் ரியாத் பகுதியில் உள்ள அனைத்து இந்திய சர்வதேச பள்ளிக்கூட மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.
இதில் Seniors பிரிவில் பங்கு பெற்ற காயல்பட்டணத்தை சார்ந்த மாணவர் முஹம்மது ஷாதுலி மூன்றாம் இடத்தை பிடித்தார். இவர் ரியாதில் உள்ள யாரா பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.
Sub - Juniors பிரிவில் பங்கு பெற்ற காயல்பட்டணத்தை சார்ந்த மாணவர் தாவூத் ஷாதுலி மூன்றாம் இடத்தை பிடித்தார். இவரும் ரியாதில் உள்ள யாரா பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு படித்துவருகிறார்.
பரிசுபெற்ற இருவரும் கோடைக்கால விடுமுறைகளில் இந்தியா வரும்போது காயல்பட்டணம் அல்ஜாமியுல் அஜ்ஹர் ஜும்மா பள்ளி வளாகத்தில் இயங்கும் குரான் வகுப்பில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 21 அன்று Al-Aliya International Indian School வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கேரளா மாநில முன்னாள் பொதுப்பணி துறை அமைச்சர் டாக்டர் எம்.கே. முனீர் கலந்துக்கொண்டு பரிசுகளை வழங்கினார். கேரளாவில் உள்ள Muslim Youth Welfare அமைப்பின் பொது செயலாளர் வழக்கறிஞர் என்.சம்சுதீன் முன்னிலை வகித்தார்.
முஹம்மது ஷாதுலி கிராஅத்தினை கேட்க இங்கு அழுத்தவும்
தாவூத் ஷாதுலி கிராஅத்தினை கேட்க இங்கு அழுத்தவும்
தகவல்:
ரியாதிலிருந்து அபு அஹமத் (சோனா),
காட்டு தைக்கா தெரு.
|