நாட்டின் 62ஆவது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. காயல்பட்டினத்திலுள்ள அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரி மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, தேசியக் கொடியேற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு பின்வருமாறு:-
பள்ளிக்கூடங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாக்கள்:-
எல்.கே.மேனிலைப்பள்ளி:
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.ஹனீஃபா தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை தேசியக் கொடியேற்றி வைத்தார்.
பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விழாவில் திரளாகக் கலந்துகொண்டனர்.
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி:
காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் காஜா முகைதீன் தலைமை தாங்கினார். மஸ்ஜித் மீக்காஈல் நிர்வாகிகள் ஹாஜி முஹ்யித்தீன் தம்பி துரை, ஹாஜி எஸ்.இ.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஜி வாவு அப்துல் கஃபஃபார் தேசியக் கொடியேற்றி வைத்தார். பள்ளி தாளாளர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர், பள்ளி அரபி ஆசிரியர் ஹாஃபிழ் எம்.அய்.யூஸுஃப் ஸாஹிப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், கடந்த கல்வியாண்டில் முதல் மூன்று தரங்களைப் பெற்ற மாணவர்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இதர போட்டிகளில் வென்ற மாணவர்கள் அனைவருக்கும், மேடையில் முன்னிலை வகித்தோர் பரிசுகளை வழங்கினர்.
நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. விழாவில் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி:
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் தேசியக் கொடியேற்றி வைத்தார்.
பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க அமைப்பாளர் ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ, பள்ளி துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், முதல்வர் டி.ஸ்டீஃபன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவியர் விழாவில் திரளாகக் கலந்துகொண்டனர்.
அரசு மகளிர் மேனிலைப்பள்ளி:
காயல்பட்டினம் தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் அதன் தலைமையாசிரியை யு.திருமலை தேசியக் கொடியேற்றி வைத்தார்.
பள்ளி மாணவியருக்கிடையே நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகளில் வென்ற மாணவியருக்கு இவ்விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது. அத்துடன், நடைபெற்று முடிந்துள்ள அரையாண்டுத் தேர்வில் பள்ளியளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவியருக்கு, மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரி அனுப்பி வைத்த பரிசுகளை பள்ளி தலைமையாசிரியை இவ்விழாவில் வழங்கினார்.
விழாவில் பள்ளி ஆசிரியையர், மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர்.
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி:
காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில் நேற்று காலை 08.30 மணிக்கு குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த பெற்றோர், ஆசிரியையர், மாணவியரை பள்ளி தலைமையாசிரியை எம்.ஜெஸீமா வரவேற்றுப் பேசினார்.
சுபைதா துவக்கப்பள்ளி தலைமையாசிரியை ஜாய்ஸ் தேசியக் கொடியேற்றி வைத்தார். பின்னர் கொடி வாழ்த்துப்பாடல் பாடப்பட்டது. பின்னர், பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதற்கான வழிமுறைகள் குறித்து பள்ளி வரலாற்றாசிரியை ந.நஸ் ரீன் உரையாற்றினார்.
பின்னர் சுபைதா துவக்கப்பள்ளி, மேனிலைபள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் தையலாசிரியை பாதுஷா ரிஸ்வானா அனைவருக்கும் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளி:
காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதன் ஆசிரியை அந்தோணியம்மாள் தேசியக் கொடியேற்றி வைத்தார். பள்ளி ஆசிரியையர், மாணவ-மாணவியர் விழாவில் திரளாகக் கலந்துகொண்டனர்.
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி:
காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியையர், மாணவ-மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி (தைக்கா பள்ளி):
காயல்பட்டினம் சிவன்கோயில் தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், பள்ளி தலைமையாசிரியை புனிதா தேசியக் கொடியேற்றி வைத்தார்.
பள்ளி ஆசிரியையர் மற்றும் மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (தீவுத்தெரு):
காயல்பட்டினம் தீவுத்தெருவில் அமைந்திருக்கும் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளி தலைமையாசிரியை ஏசுவடியாள் தேசியக் கொடியேற்றி வைத்தார்.
பின்னர் மாணவியர் நாட்டுப்பற்றுப் பாடல்கள் பாடினர். பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவி எஸ்.கே.எஸ்.நுஸுலா நாட்டுப்பற்றின் அவசியம் குறித்து உரையாற்றினார். ஆசிரியையரின் அறிவுரையைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில் பள்ளி ஆசிரியையர், மாணவ-மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர்.
அல்அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி:
காயல்பட்டினம் அலியார் தெரு அல்அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளி நிர்வாகி ஏ.சி.செய்துல்லாஹ் தேசியக் கொடியேற்றி வைத்தார்.
மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியையர், பெற்றோர் மற்றும் மாணவ-மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர்.
கல்லூரி:-
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி:
காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் நேற்று காலை 08.30 மணிக்கு குடியரசு தின விழா நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். பள்ளி செயலர் ஹாஜி வாவு மொஹுதஸீம், துணைச் செயலாளர் ஹாஜி வாவு இஸ்ஹாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்கமாக மாணவியர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செந்தூர் கவிதா நர்ஸிங் ஹோம் மருத்துவமனையை நடத்தும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ராகிணி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசியக் கொடியேற்றி வைத்தார். பின்னர் மாணவியர் கொடி வாழ்த்துப் பாடல் பாடினர்.
பின்னர் நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில், கல்லூரியின் இரண்டாமாண்டு பி.பி.ஏ. மாணவி ராபியத்துல் அதவிய்யா கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். மூன்றாமாண்டு வணிகவியல் மாணவி ராபியத் ஷரஃபிய்யா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், கல்லூரியின் நிறுவனர் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் அவர்களின் மனைவி வஜீஹா சிறப்பு விருந்தினருக்கான நினைவுப் பரிசை வழங்கினார்.
பின்னர் கல்லூரி முதல்வர் முனைவர் மெர்ஸி ஹென்றி வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து முதலாமாண்டு ஆங்கில இலக்கியத்துறை மாணவி எஸ்.ஓ.கதீஜா ஃபஸீலா ஆங்கிலத்தில் உரையாற்றினார். பின்னர் மாணவியர் நாட்டுப்பற்றுப் பாடல் பாடினர். பின்னர், இரண்டாமாண்டு ஆங்கில இலக்கியத் துறை மாணவி ப்ரவீனா தமிழில் உரையாற்றினார். பின்னர் மாணவியர் குழுப்பாடல் பாடினர்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்றினார். பின்னர், கல்லூரி மாணவர் பேரவையின் துணைத்தலைவர் பி.முத்து கதீஜா நன்றி கூற, மூன்றாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி ஃபாத்திமா ஃபர்ஹானாவின் துஆவுக்குப் பின் நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
பொதுநல அமைப்புகள்:-
கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை:
காயல்பட்டினம் கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை சார்பாக வள்ளல் சீதக்காதி திடலில் தேசியக் கொடியேற்றப்பட்டது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கி தேசியக் கொடியேற்றி வைத்தார்.
அறக்கட்டளை தலைவர் ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் நகர பிரமுகர்கள், பொதுமக்கள் இவ்விழாவில் திரளாகக் கலந்துகொண்டனர்.
அனைத்து சமுதாய மக்கள் சார்பாக...
காயல்பட்டினம் அனைத்து சமுதாய மக்கள் சார்பாக, மகாத்மா காந்தி நினைவு வளைவு அருகே குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்காக மகாத்மா காந்தி நினைவு வளைவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வளைவின் மேலே தேசியக் கொடியேற்றப்பட்டது.
நகரப் பிரமுகர்கள் மற்றும் அனைத்து சமுதாயங்களைச் சார்ந்த பொதுமக்கள் விழாவில் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் மற்றும் படங்களில் உதவி:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி,
பிரதான வீதி, காயல்பட்டினம்
மற்றும்
வீனஸ் ஸ்டூடியோஸ்,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |