காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில், 26.01.2011 குடியரசு தினத்தன்று பட்டம் பறக்கவிடும் போட்டி நடைபெற்றது.
ஆளுயர பட்டங்கள், அதற்கும் மேலான உயரம் கொண்ட பட்டங்கள், பல வடிவங்களைக் கொண்ட பட்டங்கள் என கண்ணைக் கவரும் பல வண்ணங்களில் போட்டியாளர்கள் தமது பட்டங்களை பறக்க விடுவதற்காக ஆர்வத்துடன் கொண்டு வந்திருந்தனர்.
அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. பட்டத்தின் அழகு, வடிவமைப்பு, பறக்கும் தொலைவு, பறக்கும் உயரம், இலுவை பலம் ஆகியவற்றைக் கணக்கிட்டு போட்டி நடுவர்கள் மதிப்பெண்களிட்டனர்.
இறுதியில், அனைத்துப் பிரிவுகளிலும் முதல் மூன்றிடங்களைப் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு பெற்றோர் விபரம் பின்வருமாறு:-
முதல் பிரிவில் இரண்டு அடிக்குட்பட்ட பட்டங்கள் போட்டியில் இடம்பெற்றன. அதில்,
இஸ்மத் ஹாரிஸ் முதல் பரிசையும்,
எம்.எஃப்.அப்துல் காதிர் ஃபஹத் இரண்டாம் பரிசையும்,
எஸ்.ஏ.ஆர்.ரிஃப்கான் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
இரண்டாம் பிரிவில் 4 அடிக்குட்பட்ட பட்டங்கள் போட்டியில் இடம்பெற்றன. அதில்,
முத்து கணேஷ் முதல் பரிசையும்,
முஜம்மில் இரண்டாம் பரிசையும்,
மெய்தீன் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
மூன்றாம் பிரிவில் 4 அடிக்கு மேற்பட்ட பட்டங்கள் போட்டியில் இடம்பெற்றன. அதில்,
மகேஷ் முதல் பரிசையும்,
முத்து ராஜா இரண்டாம் பரிசையும்,
சாகுல் ஹமீத் மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றனர்.
வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு நகரப் பிரமுகர்கள் தமது கரங்களால் பரிசுகளை வழங்கினர். ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகள் அவர்களைப் பாராட்டினர்.
இப்போட்டிகளைக் காண, நகரின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான குழந்தைகள், சிறுவர்-சிறுமியருட்பட திரளான பொதுமக்கள் வந்திருந்தனர்.
தகவல் மற்றும் படங்கள்:
கலாமீ யாஸிர் மூலமாக,
எஸ்.ஆர்.பி.ஜஹாங்கீர்,
காயல்பட்டினம். |