இன்று (ஜனவரி 25) தேசிய வாக்காளர் தினத்தை (National Voters Day) முன்னிட்டு, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமையில் "தேசிய வாக்காளர் தின உறுதிமொழி" ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர், புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கி, விழா பேருரை ஆற்றினார். தமிழக மாநில தேர்தல் ஆணையர் சய்யத் முனீர் ஹோடா IAS (Retd.), தமிழ் நாடு அரசின் தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி IAS, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் IAS மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் டீ. கார்த்திகேயன் IAS ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தகவல்:
தமிழக அரசு செய்தி வெளியீடு
|