தமிழக அரசின் இலவச எரிவாயு இணைப்பு, அடுப்பு மற்றும் உருளை (சிலிண்டர்) வழங்குவதற்கான - பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 29.01.2011 அன்று காலை முதல் மாலை வரை காயல்பட்டினம் இளைஞர் அய்க்கிய முன்னணியில் உறுதிச்சீட்டு (டோக்கன்) வழங்கப்பட்டது.
வட்ட வழங்கல் அலுவலர் நம்பிராயன் இம்முகாமில் கலந்துகொண்டு, பதிவுப்பணம் செலுத்தி பெயர் பதிவு செய்துகொண்ட பயனாளிகளின் பட்டியலை சரிபார்த்து, உறுதிச் சீட்டை வழங்கினார்.
இவர்களுக்கான எரிவாயு இணைப்புகள் இளைஞர் அய்க்கிய முன்னணி அருகே நாளை (01.02.2011) நடைபெறவுள்ள விழாவின்போது வழங்கப்படவுள்ளதாக நகர்மன்ற உறுப்பினர் எஸ்.அய்.ரஃபீக் தெரிவித்தார்.
தற்சமயம் காயல்பட்டினம் நகர்மன்றத்திற்குட்பட்ட வார்டு 08, 09, 12 ஆகிய பகுதிகளைச் சார்ந்த பயனாளிகளுக்கு உறுதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த வரிசையில் மற்ற வார்டுகளைச் சார்ந்தோருக்கும் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். |