காயல்பட்டின கருப்புடையார் வட்டம் (சிங்கித்துறை) பகுதியில், தமிழக அரசின் கடலோரபகுதிகளில் ஆபத்தான இடங்களில் உள்ள வீடுகளை மாற்று இடத்தில் கட்டும் திட்டத்தின் கீழ் [Vulnerability Reduction of Coastal Communities (VRCC)], கட்டப்படும் 169 குடியிருப்புகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டத்திற்கான நிலம் தவறான வழியில் ஆர்ஜிதம் படுத்தப்பட்டதாகவும், கட்டுமான பணிக்கான ஒப்புதல் நகராட்சியிடம் இருந்து பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சியின் சார்பில் சமீபத்தில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் உட்பட பல அரசு துறைகள் மேல் வழக்குதொடரப்பட்டது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இத்திட்டம் குறித்து பல ஆவணங்கள் சமர்பிக்கவேண்டி உள்ளது என்று கூறி அரசாங்க தரப்பு - இவ்வழக்கினை தள்ளிப்போட வேண்டியது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி - இவ்வழக்கினை பிப்ரவரி 21 வரை தள்ளிபோட்டுள்ளார் என தெரிகிறது. கட்டுமானப்பணிகளுக்கு தடைப்போட நீதிபதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஜனவரி 13 அன்று காயல்பட்டணத்தில் இருந்து குழு ஒன்று, மாவட்ட ஆட்சியர் திரு சி.என்.மகேஸ்வரனை சந்தித்தது. அவ்வேளையில் வழக்கு தொடர சாத்தியமாக ஜனவரி 31 வரை குடியிருப்பு கட்டுமான வேலையை நிறுத்தி வைப்பதாக மாவட்ட ஆட்சியர் வாக்களித்திருந்தார் என தகவல்கள் கூறின. இப்போது தடை உத்தரவு கிடைக்கப்பெறாத காரணத்தால் கட்டுமான பணிகள் இன்று மீண்டும் துவங்கின.
செய்தி திருத்தப்பட்டது (1/2/2011) செய்தி திருத்தப்பட்டது (14/2/2011)
1. பிரச்சனை தீர மறியல் செய்க! posted byjamal (colombo)[01 February 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 2477
நமது மக்கள் இதைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் துரதிஷ்டம். ஊர்மக்களை திரட்டி கட்டிட பணிகளை நிறுத்த மறியல் போராட்டம் செய்தால்தான் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.
2. karpudaiyar vattam posted byM.E.L.NUSKI (Riyadh -KSA)[01 February 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2479
எந்த அரசு அமைந்தாலும் நமக்கு காயல்பட்டினத்திற்கு ஆப்பு தான் வைப்பார்கள். அனைவர்களும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது தான் மிக்க நன்று. அனைவர்களும் நமது அடையாள அட்டையை மாவட்ட ஆட்சி தலைவர் அல்லது வட்டசியர் வசம் ஒப்படைத்து விட்டு நமது எதிர்ப்பை தெரிவிக்க நல்ல நேரம். எங்கள் அனைவர்களின் ஆதரவு எப்போதும் வுண்டு .ஐக்கிய பேரவை நல்ல முடிவினை விரைவாக எடுக்க அன்புடன் கேட்டுகொள்வோம். அனைவர்களும் நமது கருத்தை காயல்.வெப்சைட் மூலம் தெரிவிப்போம் .
நன்றி. என்றும் அன்புடன்
M .E .L .நுஸ்கி
ரியாத்
சவுதி அரேபியா
Regarding this coming election,please don't collect any money from any of the political party,because it is pacca haraam haraam haraam...
dear kayalites(who r all visit kayal website) please advise ur family members not to collect any money from political parties.
even single politician didn't good things for our native.all are cheating person.
I was remember that in the 93(or 94 iam not sure)election some of the people ask dua while loading the poll box in to the van.this happened at central school.is it correct? why we should ask dua for bloddy politicians.
everybody has to think themself,what this politicians did for our native?people has to realise,otherwise sure there will be big problem for our native.
4. ??? posted byzubair (riyadh)[01 February 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2483
அஸ்ஸலாமு அலைக்கும் . அன்பு கயலர்களே!. இது கவர்மென்ட் சம்பந்தப்பட்டது நம் ஊர் அமைப்புகளும், அணைத்து கட்சிகளும் அடையாள அறப்போராட்டம் நடத்தினீர்கள் நல்ல விஷயம் ஆனால் அதன்பலன் கிடைக்காத பட்சத்தில் இனிமேல் அதே அறப்போராட்டத்தை வேலை நடக்கும் இடத்திலும், வேலைக்கு பயன் படுத்தும் வழிகளிலும் நடத்துவதுதான் உத்தமம்.
இதில் எந்த அதிகாரியும், எந்த ஜட்ஜாளும் தீர்ப்பு கொடுக்க முடியாது கண்டிப்பாக அறப்போராட்டமாகத்தான் அமையனும் காயல் மக்கள் இதற்க்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கணும் நமக்கு சாதகமான டாக்மேன்ட்ச்கள் இருக்கும்போது சட்டம் சத்தியத்தை சொல்லணும். சொல்லமருதால் மக்கள் தீர்ப்பே..... மகேசன் தீர்ப்பு. (ஒற்றுமை)
Moderator's note: Message edited.
5. நடப்பவைகள் எல்லாம் நன்மையாக இருக்கட்டும். posted byசாளை ஜியாவுதீன் (அல்கோபார்)[01 February 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2484
அனைவர்களின் கருத்துக்களும் அருமையாக உள்ளது படிப்பதற்கு), ஆனால் நடைமுறையில் சாத்தியமா!!
போராட்டம், கட்டிடப்பணிகள் தடுத்து நிறுத்துதல் எல்லாம் நீதிமன்ற அவமதிப்பில் கொண்டு செல்லும். நாம் நீதிக்கு மதிப்பு கொடுப்பவர்கள். நீதி மன்றம் மூலமே நல்ல முடிவு கிடைக்க பாடுபடணும்.
ஒரு வேளை கட்டிடம் கட்டுவது உறுதி தான் என்று தீர்ப்பு வந்தால், நாம் நம் ஊரில் உள்ள நலிந்த, ஏழை மக்களின் லிஸ்ட் எடுத்து அவர்களுக்கு அந்த வீடுகளை ஒதுக்கீடு செய்ய முயற்சி செய்யலாமே, ஐக்கிய பேரவை மூலமாக.
எல்லாம் நம்முடைய தவறுகள் தான், இவ்வளவு வேலைகள் நடந்தும், நமக்கு ஒன்றுமே தெரியவில்லை, பார்த்தீர்களா..(நிலம் வாங்கி, ஆர்ஜிதம் படுத்தி, நகராட்சியிடம் ஒப்புதல் பெறாமல் கட்டிடம் கட்டி,.... ).
நடப்பவைகள் எல்லாம் நன்மையாக இருப்பதற்கு அல்லாஹ் உதவிசெய்வானாக..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross