ரபியுல் அவ்வல் (1432) மாத அமாவாசை பிப்ரவரி 3 வியாழன் அன்று - இங்கிலாந்து நேரப்படி காலை 2:33 மணி அளவில் ஏற்படுகிறது.
அப்போது இந்திய நேரம் காலை 8:03 மணி. அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மறையும் நேரம் 6:24, சந்திரன் மறையும் நேரம் 6:39. சூரியன்
மறைந்து 15 நிமிடங்கள் கழித்து சந்திரன் மறைந்தாலும், அவ்வேளையில் சந்திரனின் வயது ஏறத்தாழ 10.5 மணி நேரமாக இருந்தாலும்,
காயல்பட்டணத்தில் வெறுங்கண்ணுக்கு பிறை தெரியாது. மேலும் அன்று வெறுங்கண்கொண்டு பசிபிக் கடலின் வட பகுதிகளிலும், வானம் தெளிவாக
இருந்தால் வட மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு தென் அமெரிக்க மற்றும் ஆப்ரிக்காவின் வட பகுதிகளிலும்,
ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பிறையை காணலாம்.
பிப்ரவரி 4 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:25 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:24. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 34.5 மணி நேரம். வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் அன்று காணலாம். மேலும் தெற்கு ஆஸ்திரேலியா
மட்டும் நியூசிலாந்து தவிர உலகின் பிற பகுதிகளிலும் வெறுங்கண்கொண்டு பிறையை காணலாம்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு பிப்ரவரி 3 (அமாவாசை) அன்று சபர் 29
பூர்த்தி ஆகிறது. அன்று உலகில் சில பகுதிகளில் பிறை காண வாய்ப்புள்ளது. அவ்வாறு காணப்பட்டால் பிப்ரவரி 4 - அவர்களுக்கு ரபியுல் அவ்வல்
1 ஆகும்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு பிப்ரவரி 3 (அமாவாசை) அன்று சபர் 29 முடிந்திருக்கும்.
பிப்ரவரி 3 அன்று காயல்பட்டண பகுதிகளில் பிறை வெறுங்கண்களுக்கு தென்பட வாய்ப்பில்லாததால் அவர்கள் சபர் மாதத்தை 30 ஆக பூர்த்தி
செய்வர். பிப்ரவரி 5 அவர்களுக்கு - ரபியுல் அவ்வல் 1 ஆகும்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்க்கு பிப்ரவரி 4 - ரபியுல் அவ்வல் 1 ஆகும்.
தகவல்:
www.kayalsky.com
|