தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) இரண்டாம் கட்ட பணி 9.2.2011 முதல் 28.2.2011 முடிய நடைபெறவுள்ளது. இப்பணியில் ஆசிரியர்களும், அரசு அலுவலகர்களும் ஈடுபட உள்ளனர். வீடு வீடாக கணக்கெடுப்புப்பணி நடைபெறும் காலத்தில் தங்கும் விடுதிகள், மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக தங்கியிருப்பவர்கள், சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் போன்றவர்களையும் கணக்கெடுப்பில் சேர்க்கப்படும்.
வீடற்ற மக்கள் தொகையும் கணக்கெடுக்கப்படும். பொதுமக்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சரியான தகவல்களை அளிக்க வேண்டும். கணக்கெடுப்பாளர் கேட்கும் கீழ்வரும் கேள்விகளுக்கு பொறுமையாக விபரங்களை அளிக்க வேண்டும்:-
(1) குடும்ப தலைவர் மற்றும் குடும்பத்திலுள்ளவர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் வயது
(2) திருமண நிலை, திருமணத்தின் போது வயது
(3) மதம்
(4) தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் அல்லது மற்றவரா?
(5) மாற்றுத்திறன் (ஊனம்) உள்ளவர்கள் பற்றிய விபரம்
(6) எழுத்தறிவு மற்றும் கல்வி நிலைமை
(7) பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள்
(8) இடம் பெயர்ந்த விபரம்
(9) குழந்தைப்பேறு விபரங்கள்
தகவல்:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியகம் |