தொழில், படிப்பு, வியாபாரம் நிமித்தமாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் (NRIs) தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வசதியில்லாமல் இதுவரை இருந்தது.
2014 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும், அவர்கள் இருக்கும் நாட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என்ற பிரதமர் மன்மோகன் சிங் உடைய வாக்குறுதியின் தொடர்ச்சியாக, தற்போது Registration of Electors (Amendment) Rules, 2011 என்ற சட்டத்தை நேற்று மத்திய அரசாங்கம் - தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை பெற்று - வெளியிட்டது.
அதன்படி - பாஸ்போர்டில் உள்ள முகவரி எந்த தொகுதிக்குள் உள்ளதோ,
அத்தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் - வெளிநாடுவாழ் இந்தியர் தன் பெயரை சேர்த்துக்கொள்ளலாம். இதற்கென பிரத்தியேகமாக படிவம் 6A (Form 6A) தயாரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் நடைமுறை படுத்தப்படும் விதம் குறித்த விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
|