தமிழக அரசு - குறிப்பிட்ட வருமானப் பிரிவில் உள்ளவர்களுக்கு - வீடு கட்ட வட்டியில்லா கடன் கொடுப்பதாக காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் ஜனவரி 30, 2011 தேதியிட்ட துண்டு பிரசுரம் நகரில் வினியோகிக்கப்பட்டுள்ளது. அதன் சாராம்சம் வருமாறு :-
சொந்த நிலம் வைத்திருப்பவர்கள், குடிசையில் அல்லது பழைய வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் பாதி வீடு கட்டி மீதிப்பகுதியைக் கட்டி முடிக்க பொருள்வசதி இல்லாதவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். மாத வருமானம் ரூ.4,000 உள்ளவர்கள் ரூ.1,60,000மும், மாத வருமானம் ரூ.3,000க்கு கீழ் உள்ளவர்கள் ரூ.1,00,000மும் கடனாகப் பெறலாம். கடனாக வழங்கப்படும் தொகைக்கு வட்டி கிடையாது.
இது குறித்து காயல்பட்டணம்.காம் சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான தேசிய வீடு வசதி வங்கி (National Housing Bank) மற்றும் தமிழ்நாடு வீடு வசதி வாரியம் (Tamil Nadu Housing Board) அலுவலகங்களில் வினவியது. விளக்கம் வழங்கிய அதிகாரிகள் - இதுபோன்ற திட்டம் எதையும் தமிழக அரசு அறிவிக்கைவில்லை என்றும், இதுபோன்ற ஒரு திட்டத்தினை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் [Interest Subsidy Scheme for Housing the Urban Poor (ISHUP)], ஆனால் அது வட்டியில்லா திட்டம் இல்லை என்றும் கூறினர். வங்கிகள் விதிக்கும் வட்டியில் 5 சதவீதம் வரை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்று (Subsidy) கொள்வதாகவும், மீதி வட்டியை கடன் பெற்றவரே அடைக்கவேண்டும் என்றும் மேலும் அவர்கள் தெரிவித்தனர்.
இது வட்டியில்லா கடன் என நினைத்து காயல்பட்டணத்தில் பலர் வங்கி கடனுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.
மத்திய அரசு 2008ஆம் ஆண்டு - நாட்டில் சொந்தமாக வீடு உள்ளோர் எண்ணிக்கையை அதிகரிக்க - Interest Subsidy Scheme for Housing the Urban Poor (ISHUP) என்ற பெயரில் திட்டம் ஒன்றை அறிவித்தது. அதன் பயனாளிகளாக இரு பிரிவினரை தேர்ந்தெடுத்தது. மாத வருவாய் 3300 ரூபாய் வரை உள்ளோர் Economically Weaker Section (EWS) பிரிவை சார்ந்தவர் என்றும், மாத வருவாய் 3301 ரூபாய் முதல் 7300 ரூபாய் வரை உள்ளோர் Low Income Group (LIG) பிரிவை சார்ந்தவர் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் கடன் பெறுபவருக்கோ, அவர் மனைவி/கணவன்/குழந்தைகள் பெயரிலோ, வேறு எந்த வீடோ/நிலமோ இருக்க கூடாது என்றும் விதிமுறைகளை அறிவித்திருந்தது.
EWS பிரிவில் வீடுகட்டுவோர் குறைந்தது 25 சதுர மீட்டர் அளவில் வீடு கட்டவேண்டும். LIG பிரிவில் வீடுகட்டுவோர் குறைந்தது 40 சதுர மீட்டர் அளவில் வீடு கட்டவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தொகைவரை (EWS பிரிவினருக்கு 1,00,000 ரூபாய் அல்லது LIG பிரிவினருக்கு 1,60,000 ரூபாய்) கடன் பெற்றவரின் - அவர் கட்ட இருக்கும் வீடு/நிலம் - வங்கியிடம் அடமானமாக இருக்கும். மூன்றாம் நபர் உத்தரவாதி (Surety) தேவையில்லை. நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் கடன் பெறுபவர், மூன்றாம் நபர் உத்தரவாதி (Surety) வழங்க வேண்டும்.
கடன் எத்தொகையாக இருப்பினும், முதல் 1,00,000 ரூபாய் வரை 5 சதவீத வட்டியை மத்திய அரசாங்கம், கடனாளி சார்பாக வங்கியிடம் முன் கூட்டியே செலுத்தி விடும். மீதி வட்டி தொகையை கடன் வாங்கியவர் மாதந்திர தவணையாக (EMI) - 15 - 20 வருட காலகட்டத்தில் - திருப்பி செலுத்தவேண்டும். உதாரணமாக வங்கி வட்டி 8 சதவீதம் என்றிருப்பின், அதில் 5 சதவீத வட்டியை மத்திய அரசாங்கம் முன்னரே, கடன் பெறுபவர் சார்பாக கட்டிவிடும். மீதி 3 சதவீத வட்டியை கடன் பெற்றவரே கட்டவேண்டும்.
கடன்பெறும் வேளையில், கடனாளி எவ்வகை வட்டியில் (Fixed Rate/Floating Rate) - கடனை திரும்ப செலுத்த விரும்புகிறார் என தெரிவிக்கவேண்டும். Fixed Rate வட்டி என்பது Reset clause after five years என்ற நிபந்தனையுடன் இருக்கும். ஆகவே ஐந்தாண்டு கழித்து வட்டி விகிதம் மாறும். அதனுடன் மாதந்திர தவணை EMI தொகையும் மாறும்.
மத்திய அளவில் இத்திட்டத்தினை - National Housing Bank (NHB) மற்றும் Housing and Urban Development Corporation Limited (HUDCO) என்ற இரு நிறுவனங்கள் வழி நடத்தும் (Central Nodal Agencies) என்றும், மாநில அளவில் அதற்குரிய நிறுவனங்கள் வழி நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இத்திட்டத்தினை Tamil Nadu Housing Board வழி நடத்துகிறது (State Level Nodal Agency). இத்திட்டத்தில் (Central Bank of India, Indian Overseas Bank உட்பட) குறிப்பிட்ட சில அரசாங்க வங்கிகளும், வீடு கட்ட கடன் தரும் (Housing Finance Companies) சில நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.
இத்திட்டம் அறிவிக்கப்பட்ட பின் வங்கிகளிடமிருந்தும், மக்களிடமிருந்தும் அதிக வரவேற்ப்பு இல்லாததால் 2010 மார்ச் மாதத்தில் - மத்திய அரசாங்கம் EWS பிரிவு வரம்பை ரூபாய் 5000 என்றும், LIG பிரிவு வரம்பை ரூபாய் 5,001 முதல் ரூபாய் 10,000 என்றும் மாற்றியது.
மேலும் இத்திட்டத்திற்கு உதவி புரியும் வகையாக தமிழக அரசு செப்டம்பர் 15, 2010 தேதியிட்ட அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கடன் பெறுபவருக்கு பத்திர பதிவு உள்ளிட்ட பலவற்றில் சலுகை அறிவித்துள்ளது.
2. வட்டி posted bysyed ahamed (riyadh saudi )[05 February 2011] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2537
வட்டி இல்லா கடன் எப்படி தருவாகனு ஒரு சத்தேகம் எனக்கு இருதது. என்னுடைய கருது என்ன வென்றால் இதை பத்தி முழுமையாக தெரியாமல் அறிவித்தது தவறு இனிமேல் இதைபோன்ற தவறுகள் நிகழாமல் பாதுகொல்லுகள் இந்த தவறுக்கான உங்களையும் அந்த கடனை வாக்கிய அனைவரையும் அல்லா மனிபானாக ஆமின்
3. பிரயோஜனம் posted bymauroof (Dubai)[05 February 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2540
பிறயோஜனமான தகவல். எல்லோரும் வட்டி இல்லா கடன் என்றே நம்பிகொண்டிருக்கிரார்கள். இது குறித்த முந்தைய செய்தியின்போதே ஒரு சகோதரர் விளக்கம் தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற அறிவிப்புகள் வெளியிடும் முன்னர் அதை பற்றி நன்கு அறிந்து கொள்வது நல்லது.
4. Interest/Usury is strictly forbidden in islam posted byMuhammadh Abubacker (Chennai)[05 February 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 2541
Those who swallow usury cannot rise up save as he ariseth whom the devil hath prostrated by (his) touch. That is
because they say: Trade is just like usury; whereas Allah permitteth trading and forbiddeth usury. He unto whom an
admonition from his Lord cometh, and (he) refraineth (in obedience thereto), he shall keep (the profits of) that which
is past, and his affair (henceforth) is with Allah. As for him who returneth (to usury) Such are rightful owners of the
Fire. They will abide therein.(Quran 2:275)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross