சென்னை ஷேக்ஸ்பியர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இங்க்லீஷ் ஸ்டடீஸ் நிறுவனம் மாநில அளவில் நடத்திய ஆங்கில புலமைத் தேர்வில், காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி எம்.எஸ்ஃபாத்திமா ஃபஸீஹா மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு பணப்பரிசும், கேடயமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இம்மாணவி பரிசு பெறும் நிகழ்ச்சி 11.02.2011 அன்று பொதிகை தொலைக்காட்சியில் “பூச்செண்டு” என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சாதனை மாணவியை பள்ளி தாளாளர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.
5. வாழ்க வளமுடன்.. posted byசாலை ஜியாவுதீன் (அல்கோபார் )[10 February 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2608
மாஷா அல்லாஹ். வெரி குட்.. வெரி குட்..
மீண்டும் ஒரு மாணவி சாதனை படைத்தது இருக்கின்றாள். அன்பு பாராட்டுக்கள். மென்மேலும் பல வெற்றிகள் பெற அதுவும் குறிப்பாக முதல் இடத்தில் பெற வாழ்த்துகிறேன்.
உன்னுடைய திறமை மற்றும் கல்வி மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் அருகில் இருக்கும் மற்ற மாணவ மாணவிகளுக்கும் கற்றுக்கொடுக்கலாமே..!!(உன்னுடைய ப்ரீ டைமில்).
-ஓஹ்ஹ்... என் நண்பன் ரஜீன் உடைய மகளா!!. (இந்த மாதிரி நல்ல பதிவு போடும் போது பெற்றோர்களின் பெயரும் போடுங்கள்).
உன் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்,பள்ளி நிர்வாகிகளுக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் மற்றும் பாராட்டுக்கள்.
ஒரு சிறிய பணமுடிப்பு அனுப்பி வைக்கப்படும். இன்ஷா அல்லாஹ்..
6. மாணவிகளே ! posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[10 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2609
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
மாநில அளவில் ஆங்கில புலமைத் தேர்வில் மூன்றாம் இடம் பெற்று பரிசும், கேடயமும் வாங்கி சாதனை படைத்தமைக்கு வாழ்த்துக்கள்.
மேலும் படிப்பிலும் நன்கு கவனம் செலுத்தி அதிக மார்க்குகள் வாங்கி தேர்வில் வெற்றிப் பெற பிரார்த்திக்கிறேன்.
------------------------------------------------
மாணவ மணிகளே !
எந்த ஒரு மொழியையும் கற்றுக் கொள்ள மார்க்கம் தடை செய்யவில்லை. மாறாக மற்ற மொழிகளை கற்றுக்கொள்ள உற்சாகப்படுத்துகிறது. ஆகையால் ஆங்கில மொழி மட்டுமல்ல அரபி, உருது, இந்தி என்று எந்த ஒரு மொழியானாலும் அதைக் கற்று அதில் புலமை பெறுவது நல்லது.
நம் தாய் மொழியாகிய தமிழை நன்கு கற்று அதிலே புலமைப் பெற்றால் மிகவும் சிறப்பாகும். ஏனென்றால் இன்றைய நமது தமிழ் சமுதாயம் தமிழை மறந்தவர்களாகவே இருக்கிறோம்.
மிகுதமானவர்களுக்கு (அடியேன் உட்பட ) எழுத்துப்பிழைகள் அதிகமாக ஏற்படுகிறது.
------------------------------------------------
மாணவிகளே !
உங்களில் பெரும்பாலோருக்கு நல்ல உற்சாகமும், திறமையும் இருப்பதோடு நிறைய சாதனைகளை படைக்கிறீர்கள் சந்தோசம்.
8. Well done! posted byRaiz (Sydney)[11 February 2011] IP: 156.*.*.* Australia | Comment Reference Number: 2611
Alhamthulillah!
Well done Fasheeha! We wish to congratulate you for this achievement and wish you all the best for more achievements in future Insha Allah! We feel very proud of you!
By the way, her proud parents are Mr. Sathakathullah and Mrs. Katheeja from Velli Mahal, KTM Street! All the best!
11. Second Prize! posted byRaiz (Sydney)[11 February 2011] IP: 114.*.*.* Australia | Comment Reference Number: 2616
Dear Moderator,
Thank you for posting this news which encourages and inspires our Kayal children!
But, I wish to point out one correction. In fact, this student Fathima Fasheeha has got second prize not the third prize. She has got this award among the Tamil Nadu students who were in level III
(level I-LKG-2nd Std, level II-3rd-6th Std , level III 7th-10th Std , level IV 11 and 12 and level V college students).
This level III might have been interpreted as Third prize! But actually she has got second prize!
Please check with the school authority and brother S.K.Salih and conform it. Anyway, its very encouraging reading about good people’s comments (she thanked every one!) and she will be more encouraged if you kindly correct the news after confirming with the concerned people. Thank you
13. “வள்ளுவனின் வாய் மொழியில் ஓர் சிறிய திருத்தம்”, posted byM.N.L.முஹம்மது ரஃபீக் (அபு ரெஸ்மியா) (புனித மக்கா)[12 February 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2626
பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்த கண்மணியே! பயிலும் பள்ளியின் மணிமகுடத்தில் பதித்த மாணிக்கமாய் ஒளி வீசுகின்றாய், உன் உழைப்பு,உற்சாகம்,ஊக்கம்,இவைகளுக்கு கிடைத்த பரிசு தான் இந்த வெற்றி!!!
“ஈன்ற பொழுதினை பெரிதுவக்கும் தன் மகனை சான்றோர் எனக் கேட்ட தாய்” எனும் வள்ளுவனின் வாய் மொழியில் ஓர் சிறிய திருத்தம், தன் மகனை என்பதைத் தன் மகளை என மாற்றிக்கொள்வது உனக்குப் பொருந்தும்.
உனக்கும் உன் வெற்றிக்குப் பின்னால் உறுதுணையாய் இருந்த,நல்லாசிரியர்,உனை ஈன்ற உன் அருமைப் பெற்றோர்கள்,யாவர்க்கும் இந்த எளியவனின் பாராட்டுக்கள்!!!
14. பல குழப்பங்கள் posted byசாளை ஜியாவுதீன் ( அல்கோபார் )[12 February 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2628
இந்த மாணவி உடைய பெற்றோர்களின் பெயரை போட்டு பதிவு போட்டு இருக்கலாமே? இங்கு பலருக்கு பல குழப்பங்கள் (போட்டோவை பார்த்து), அந்த தெருவா, இந்த தெருவா, அவரின் மகளா, இவரின் மகளா என்று..
வாசகர்களின் கருதைப்பர்த்து தான் முழு செய்தி அறிய முடிகின்றது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross