காயல் நல மன்றம் - கத்தர் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகள் இணைந்து, தொடர்ந்து மூன்றாமாண்டாக காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் நாளை காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் நடத்துகின்றன.
முகாமுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், நேற்றிரவு 08.30 மணிக்கு இக்ராஃ கூட்டரங்கில் நடைபெற்றது.
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதியும், முகாம் ஒருங்கிணைப்பாளருமான எஸ்.அப்துல் வாஹித் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,
முகாம் குறித்து பகுதிவாரியாக பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புச் செய்தல்...
ஜும்ஆ தொழுகைக்குப் பின், பள்ளிவாசலுக்கு வெளியே விண்ணப்பப் படிவ வினியோகம் மற்றும் சேகரிப்பு குறித்து அறிவிப்பு செய்தல்...
முகாம் நடைபெறும் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தைப் பார்வையிட்டு, தேவையான ஏற்பாடுகளைச் செய்தல்...
மருத்துவக் குழுவினரை வரவேற்றல், தங்குமிட வசதி செய்தல், வழியனுப்பல்...
புற்றுநோய் சிறப்பு மருத்துவ நிபுணருடன் உள்ளூர் தொலைக்காட்சியில் இன்றிரவு கேள்வி-பதில் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்தல்...
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியிலிருந்து தன்னார்வலர்களை முறைப்படி கோரல்...
முகாம் நேரத்தின்போது செய்யப்பட வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டு, அவற்றுக்கான பொறுப்பாளர்களை நியமித்தல்...
உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவுகள் செய்யப்பட்டது.
இரவு 11.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. முகாம் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், எம்.ஏ.செய்யித் இப்றாஹீம், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, முகாம் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். |