திருச்சி ரோஸ் கார்டன் மருத்துவமனையை சார்ந்த புற்று நோய் நிபுணர் டாக்டர் கோவிந்தராஜனுடன் நேரடி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி IIM தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இன்றிரவு (பிப்ரவரி 11) 9:15 மணியளவில் துவங்கும் இந்நிகழ்ச்சி IIM இணையதளமான www.iimkayal.org இலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் அய்க்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகள், திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகத்துடன் இணைந்து மூன்றாமாண்டு புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை, நாளை சனிக்கிழமையன்று காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: எஸ்.ஏ. நூஹு,
காயல்பட்டணம் ஐக்கிய பேரவை - ஹாங்காங்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross