மலபார் காயல் வெல்பேர் அஸோசியேஷன் (MKWA) செயற்க்குழு கூட்டம், சங்க தலைவர் மசூது தலைமையில் நேற்று காலை 11:30 மணிக்கு
(13-02-2011) சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டம் குறித்து MKWA சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
உதவிகள் கோரி கிடைக்கப்பெறும் மனுக்களின் மீதான விசாரணைகளை எப்படி செய்யலாம் என்பது பற்றி விரிவான சர்ச்சைகள் நடந்தன.
நமது ஊரில் பரபரப்பாக பரவி வரும் புற்றுநோயை பற்றி விரிவாக சர்ச்சை செய்யப்பட்டன (இந்த நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹு பூரண சுகத்தை கொடுப்பானாக ஆமீன்). இந்த கொடிய நோயின் தாக்கம் ஏற்படுவதின் காரணத்தை பற்றி கண்டறிய அமைக்கப்பட்டுள்ள CFFC அமைப்பின் செயல்பாடுகள் பற்றியும், நமது மற்று காயல் நல மன்றங்கள் இதற்காக பல திட்டங்களையும் செயல் படுத்தி வருவதை பற்றியும் சர்ச்சைகள் நடந்தன.
உதவிகள் கோரி கிடைக்கப்பட்ட மனுக்களின் விசாரணையின் விபரங்களை சம்பந்தபட்டவர்கள் கூட்டத்தில் அறிவிக்க, அது பற்றியும் சர்ச்சைகள் நடந்தன.
அஸோசியேஷனுக்காக STATE BANK OF INDIA வின் கோழிக்கோடு பாளையம் கிளையில் (CURRENT ACCOUNT) துவங்கிய விஷயத்தை கூட்டத்திற்கு தெரியபடுத்த பட்டன.
தீர்மானங்கள்:
1) ஊரிலிந்து உதவி கோரி கிடைக்கப்பட்ட மனுவின் விசாரணை முடிவின் அடிப்படையில் மருத்துவ உதவிக்காக ரூபாய் 5000/=(ஐந்தாயிரம்) வழங்குதல்
2) உதவிகள் கோரி கிடைக்கப்பெறும் மனுக்களின் மீதான விசாரணைகளை தற்போது கையாளும் நிலைமையை தொடர்வது
3) புற்றுநோயின் தாக்கம் ஏற்படுவதின் காரணத்தை பற்றி கண்டறிய அமைக்கப்பட்டுள்ள CFFC அமைப்பின் செயல்பாட்டிற்க்காக ரூபாய் 10000/= (பத்தாயிரம்) வழங்குதல்
4) அஸோசியேஷனின் பொதுக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹு இந்த மாதம் 27 ஆம் தேதி (27-02-2011) அன்று மாலை 5 மணிக்கு நடத்துவது. அத்துடன் அன்று இரவு உணவு ஏற்பாடும் செய்வது
உறுப்பினர்களின் பிரார்த்தனைகளுடன் கூட்டம் 02:15 மணிக்கு இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்து லில்லாஹ்.
தகவல்:
K.M. முஹம்மத் ரஃபீக் (KRS)
S.I.செய்யிது ஐதுரூஸ் (SEENA),
செய்தித் தொடர்பாளர்கள்,
மலபார் காயல் வெல்ஃபேர் அசோசியேஷன்,
கோழிக்கோடு, கேரளா மாநிலம். |