செய்தி: காயல்பட்டினம் நகராட்சி மீது மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தாவிடில் ஆர்ப்பாட்டம்! தமுமுக, மமக மாவட்ட கூட்டத்தில் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மக்கள் ஆர்பாட்டம் தான் வெற்றிபெறும் வெறும் அரசியல் கட்சி ஆர்பாட்டம் வெறி கொள்ள செய்யும் posted bymackie noohuthambi (kayalpatnam)[13 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26245
ஒரு காலத்தில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தமிழகத்தில் நடந்த ஆட்சியையே அதிர வைத்தது. தஞ்சாவூர் குலுங்கீயது என்று நாளிதழ்களில் செய்தி வந்தது. நானும் அங்கே சென்ற போது நிலைமை உண்மைதான் என்று தெரிந்தது.
ஆனால் மையம் கொண்ட புயல் வலுவிழந்து கரையை கடந்தது என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் சொல்வது போல் அந்த சக்தி வலுவிழந்தது ஒரு பிரிவினால் என்பதை ஜீரணித்துக் கொள்ளத்தான் வேண்டும். தமுமுக வாக இருந்து அது மனித நேய மக்கள் கட்சியாக மனமாற்றம் கொண்டு அரசியல் கட்சியாக தன்னை மாற்றிக் கொண்டபோது தஞ்சாவூரில் எடுத்த விசுவரூபம் தன் சுயரூபத்தை இழந்து சில சட்டமன்ற ஆசனங்களுக்காக தங்களை இடம் மாற்றிக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்ற கசப்பான உண்மை இன்னும் அந்த அணியில் இருந்த முன்னாள் நண்பர்களுக்கு ரணமாக இருந்துவருகிறது.
முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினராக ரவணசமுத்திரம் பீர் முஹம்மது அவர்கள் 1967இல் அண்ணா ஆட்சியில் உள்ளே நுழைந்தபோது INNA FATHAHNAA LAKA FATH HAN MUBEENA என்று தன் உரையை ஆரம்பித்து, THAALIKAL FOUZUL ALEEM என்று திருக் குர்ஆன் வசனங்களுடன் முடித்து வெளியே இறங்குவார்கள்.கேட்பதற்கும் பார்பதற்கும் ஒரு எடுப்பான தோற்றம். அந்த தோற்றம் இல்லா விட்டாலும் குறைந்த பட்சம் அந்த இறை வசனங்களாவது சட்ட மன்றத்தில் இன்று கேட்கவில்லையே என்ற ஆதங்கம் என் போன்றவர்களுக்கு உண்டு. சகோதரர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இதை கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்று ஆசைப்படுபவர்களில் நானும் ஒருவன்.
நமது நகர் மன்றத்தை பொறுத்த வரை அரசியல் கட்சிகள் இந்த கால கட்டத்தில் போராட்டத்தில் இறங்குவது ஒரு தவறான அணுகுமுறை. கட்சி வேறுபாடு இன்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நகர்மன்றம் என்பதால், மக்கள் எல்லோரையும் ஒன்று திரட்டி ஒரு போராட்டமாக இதை ஆக்க வேண்டும். மாறாக கட்சிகள் என்று வந்தால், அது அரசியல் கட்சிகள் போராட்டமாக போய் வேண்டாத விளைவுகள் ஏற்படலாம். கவனித்து கொள்ளுங்கள். கிணறு வெட்ட பூதம் கிளம்பி விடக் கூடாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross