இணைந்து பாடுபடுவோம் ! posted byM.S.Kaja Mahlari (Singapore)[15 March 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26267
அல்ஹம்துலில்லாஹ் ! ஒரு அருமையான நிகழ்ச்சி ! குடி தண்ணீருக்காக நமதூர், நமது அருகாமையில் உள்ள மக்களும் , கடந்த காலங்களில் எப்படியெல்லாம் பொது சேவை செய்துள்ளார்கள் என்பதை இந்நிகழ்ச்சியில் நினைவு கூறப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரியது !
(சதகா) மரணத்திற்கு பின்னும் நன்மைகள் மண்ணறைக்கு வந்துகொண்டிருக்கும் நன்மைகளில் குறிப்பாக" தண்ணீர் வசதி செய்துகொடுக்கும் " சதகாவே" என்பது மாநபி (ஸல்) அவர்களின் மாண்பான உரையாகும் !
அந்த அடிப்படையில் மர்ஹூம்கலான நல்லோர்களின் "மண்ணறை" மக்களுக்கு "குடிநீர்" வசதிக்காக தான , தருமம் செய்த உதவியினால் கண்டிப்பாக நன்மையால், ஒளியினால் நிரம்பி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை !
ஆம் ! நாளை நமது "மன்னறைக்கும்" இந்த இனிய இறையருள் சூலவேண்டும் என்றால் நாமும் நமதூர் மக்களுக்கு "குடிநீர்" வசதிக்காக நம்மால் இயன்ற உதவிகளை செய்திடுவோம் !
அந்த வாய்ப்பு ஒருவேளை நமக்கு கிடைக்காவிட்டால் "குறைந்த பட்சம்" நமக்கு என கிடைக்கும் நீரை நல்ல முறையில் பயன்படுத்தி, வீண்விரயம் இல்லாமல் , பிறரின் நீரின் பங்கை நாம் பல முறையற்ற வசதிகளை பயன்படுத்தி உறிஞ்சாமல் இறைஅச்சத்துடன் வாழ்ந்தால் " பிறரின் ஹக்கை பறிக்காதவர்" என்ற சிறப்பு நிச்சயம் நமக்கு கிடைத்தே தீரும் !
அடுத்து இந்த விழாவில் நமதூர் மக்கள், பிற ஊர் மக்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், அரசு அதிகாரிகள், முதல் அமைச்சர் , இதர அமைச்சர்கள் , மாவட்ட ஆட்சியர் , நமதூர் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் என அணைத்து தரப்பு மக்களும் உறுதுணை, ஒத்துழைப்பு என நன்றி கூறப்பட்டனர் என்பது அழகிய நடைமுறையாகும் !
ஊர் நலன் என்று வரும்போது அனைவரும் ஒன்றாக கலந்து "பொதுப்பணி " செய்வதே ! நமக்கும் , நமதூருக்கும் நமது வருங்கால சந்ததிக்கும் நன்மையாக அமையும் !
இதற்கு மாறாக நான், பெரியவனா ? நீ பெரியவனா ? என்ற ஈகோ மனப்பான்மை வந்தால் நன்மைக்கு மாறாக , தீமையே மிஞ்சும் !
ஆகவே ! நமதூரின் நன்மைக்கு அனைத்துமக்களும் இறைவனுக்காக "இக்லாசுடன் " தூய எண்ணத்துடன் பாடுபடுவோமாக !
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது பொது சேவைகளை அங்கீகரித்து அருள்பாலித்து , இம்மை , மறுமை என ஈருலக சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்குவானாக ! ஆமீன் ! வஸ்ஸலாம் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross