செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
If you can't beat her, Join her... posted byAbdul Wahid S (Kayalpatnam)[18 March 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 26328
" காக்காவுக்கு போன் போடுகிறேன் நீ பேசுமா, காக்க பேச்சைக் கேட்டு அவர்கள் சொன்ன மாதிரி செய்மா , (உனக்கு) எந்த பிரச்சனையும் வராது". (Ref: My comment reference # 26186, dated 10th march, 2013)
அந்த "காக்கா" யார் என்பது மக்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.
2006ல் நடந்த பஞ்சாயத் தேர்தலில் ஐக்கிய பேரவை அடையாளம் காட்டி பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியவர் வாவு செய்து அப்துர்ரஹ்மான் ஹாஜியை அவருடைய வார்டில் அவரை தோற்கடிக்க ஒரு நபரை நிறுத்த முயன்ற ஒரு சதிவேலையின் பின்னணியையும், வெற்றி பெற்ற அப்போதைய வார்டு உறுப்பினர்கள் இதே இந்த "காக்காவின் பேராதரவுடன் அந்த பெரியவருக்கு எவ்வளவு நெருக்கடி கொடுத்தார்கள் என்பதையும் இந்த ஊர் அறியும். குறிப்பாக "ஐக்கிய பேரவை" நன்கறியும்.
அந்த நேரத்திலேயே இவருக்கு "ஆப்பு" வைத்திருந்தால் இந்த அளவுக்கு விஷயம் நிச்சயமாக போயிருக்காது. "ஆப்பு" வைக்க அந்த நேரத்தில் "ஐக்கிய பேரவை"யிடம் "ஆப்பு" கைவசம் இல்லையோ அல்லது ஆப்பு வைக்க "தைரியமும்", "துணிச்சலும்" இல்லையோ என்பது படைத்த "ரப்புல் ஆலமீனுக்கும் , ஐக்கிய பேரவைக்கும் தான் வெளிச்சம்.
கடந்த தேர்தலில் இவர்களும் அவருடன் கைகோர்த்துக் கொண்டு தேர்தல் சதியில் ஈடுபட்டார்கள். ஒரு வேலை "If you can't beat him join him " என்ற ஆங்கிலப் பழமொழியை இவர்கள் புரிந்துகொண்ட விதமோ என்னவோ?
"தோளில் போட்டத் துண்டு பாம்பாக மாறிவிட்டது" என்ற உண்மை தெரிந்த பின்னும் பாம்பை அடிக்காமல் அல்லது குறைந்த் பட்சம் விரட்டாமல் விட்டு வைப்பது கோழைத்தனம். இன்று அந்த பாம்பை விரட்ட ஒரு சகோதரி முன்வந்துள்ளார். சுருங்கச் சொல்வதானால் ஒரு பெண் இந்த "ஆப்பை" வைக்க முன்வந்துள்ளார். இப்போதாவது ஊர் நன்மையை கருத்தில்கொண்டு அந்த பழமொழியை சிறிது மாற்றி," If you can't beat her, Join her" என்று புரிந்து செயல்படுங்கள்.
இது ஒரு புறமிருக்க, "காக்கா" போடும் எலும்பு துண்டிற்காக இணையதளத்திலும், பொதுமேடையிலும் அந்த காக்காவை "மனிதநேயர்" என்று சொல்லி அவரை உசுப்பேத்திவிட்டு உபகாரத்தை எதிர்பார்க்கும் கூலிப்படைகள் மறுபக்கம். இந்தக் கூலிப்படைகள் தங்களுடைய (வால்பிடிக்கும்) தொழிலை மாற்றிவிட்டாலே போதும் "காக்கா" மாறிவிடுவார் மனம் திருந்திவிடுவார்.
தோலுரித்துக் காட்டப்பட்ட அந்த தனி நபர் இனியாவது தன்னுடைய செல்வங்களை வீணர்களுக்காக செலவிடுவதை நிறுத்திவிட்டு அல்லாஹுடைய திருப் பொருத்தத்தை நாடி ஊர் நலனுக்காகவும் செலவு செய்து நன்மையை அடைவார் என்று எதிர்பார்ப்போம்.
ஒருவேளை இந்த காக்காவும் அவரை காக்கா பிடிக்கும் கருங்காக்கைகளும் தங்களுடைய இந்த போக்கை தாங்களாகவே மாற்றாவிட்டால், இன்ஷா-அல்லாஹ் "மக்கள் சக்தி" இவர்களை மாற்றும். அதன் வெளிப்பாடுதான் நேற்று அலையென திரண்ட மக்கள் வெள்ளம். வெள்ளம் சுனாமியாக மாறும் முன் மாறிவிடுங்கள். மக்கள் உங்களை மன்னித்து விடுவார்கள், நடந்தவைகளை ஒரு கெட்ட கனவாக எண்ணி மறந்துவிடுவார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross