செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சங்கே முழங்கு! posted byகத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Kayalpatnam)[18 March 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 26334
சங்கே முழங்கு!
பொதுவாக அரசியல் சார்புடைய எந்தப் பொதுக்கூட்டங்களுக்கும் வேடிக்கை மாந்தரில் ஒருவனாக நான் எப்போதுமே செல்வதில்லை. ஆயினும், சகோதரி ஆபிதா அவர்களின் இன்றைய [17.03.2013] உரையினைக் கேட்டேன். மாஷா அல்லாஹ்! நெகிழ்வும், தெளிவும் ஊட்டின; அதையொட்டி, என்னுள் உதித்த சில கேள்விகளும், ஆலோசனைகளும், தீர்வுகளும் இதோ:
சகோதரி!
நம்ரூத், பிர்’அவ்ன், காரூன் இவர்களெல்லாம் எங்கே?
அவர்களின் சுமக்க இயலா கருவூலச் சாவிகளும் தான் எங்கே?
அமெரிக்காவின் மிகப்பெரும் நிதி நிறுவனமான லேமன் பிரதர்ஸும் இப்போது எங்கே?
வரலாற்றின் எச்சங்களிலிருந்து படிப்பினைப் பெற்றிடாமல்,
கொட்டிக் கிடக்கும் செல்வத்தை விரல்நுனியில் சுண்டிவிட்டு,
எச்சிலைக் காசுகளுக்கு அடிபணியும் அடிமைப் புத்தியினரைக் கொண்டு
பூமியையே தன் விரலசைவில் சுழலச்செய்திடலாம் என்று “கற்பனைப் பால்” பருகிடும்
இவர்களின் அறிவீனத்தையும், ஆணவத்தையும், கர்வத்தையும் துச்சமென கருதுங்கள்!
திடமுடன் நின்று இத்தகு தூசிகளை ஊதித் தள்ளுங்கள்!
தஹஜ்ஜத் போன்ற நேரங்களையும், துஆ எனும் இறையளித்த அற்புதக்கருவியையும் அழகுறப் பயன்படுத்துங்கள்! இறை உதவியுடனும், உள்ளார்ந்த அன்பை வழங்கிடும் மக்கள் ஆதரவுடனும், அசைக்கவியலா தன்னம்பிக்கையுடனும் நீங்கள் நல்வழியை முன்னெடுத்துச் செல்லுங்கள்!
ஆட்சி அதிகாரங்களைத் தங்களுக்கு வழங்கிய அல்லாஹ், உறுதியாகக் கைவிட மாட்டான், உங்களையும், எங்கள் காயல் நன்மக்களையும்!
நடப்பவை அனைத்தும் நல்லவையாக அமையட்டும். அற்பர்களின் சதி எனும் சூழ்ச்சியில் நல்லவர்களும், நல்லவைகளும் தோற்றுவிடக்கூடாது என்பது தான் என் போன்றோரின் ஆவல்.
ஒருவேளை, இறைநாட்டம் வேறாக அமைந்து விட்டாலும், அல்லாஹ்வுக்காக பொறுத்துக் கொள்ளுங்கள்!
இதைவிட மிகச் சிறந்த நற்பணியையும், உயர் பதவிகளையும், உன்னதப் பொறுப்புகளையும் வழங்கிட அல்லாஹ் போதுமானவன்.
அல்லாஹூ அக்பர் என்று உயர்ந்த குரலில் நாம் முழங்கிடுவோம்.
அனைத்துலகையும் முன்னுதாரணமின்றி படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்குத் தாழ் பணிவோம்;
‘அக்பருக்கு’ அல்ல; இறைவன் வழங்கியதைத் தடுக்கவோ, தடுத்ததைப் பெற்றுத் தரவோ இவரால் இயலாது!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross