செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...புரட்சி தலைவியின் மறுபதிப்பு posted bymackie noohuthambi (kayalpatnam)[18 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26337
பார் சிறுத்தலின் படை பெருத்ததோ அன்றி படை பெருத்தலின் பார் சிறுத்ததோ என்ற புறநானூற்று வாசகங்கள் நினைவுக்கு வருகிறது. இடம் சிறிதாக இருந்ததால் கூட்டம் பெரிதாக தெரிந்ததா அல்லது கூட்டம் பெரிதாக் இருந்ததால் இடம் சிறிதாக தெரிந்ததா, புரியவில்லை.
சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று சந்திக்கும் தைரியம் இந்த தலைவிக்கு எப்படி வந்தது. என்னை நகர்மன்ற தலைவியாக தேர்ந்தேடுத்தால் ஊருக்கு என்னென்ன செய்வேன் என்று அன்று நின்று முழக்கமிட்ட அதே மேடையில், தான் அனுபவித்து வரும் வேதனைகள் சோதனைகள் இவற்றை கூறி சாதனைகள் சாத்தியமாகாத கதையை அவர் சொன்னபோது மக்கள் அனுதாப பட்டார்கள், கூடவே கரகோஷம் செய்து ஆசுவாசப் படுத்தினார்கள்.
நீதிமன்றங்களிலே, வேதநூலைக் கொடுத்து, சத்தியமாக சொல்கிறேன் என்று கூண்டில் நிற்கும் சாட்சியிடம் சொல்ல சொல்வது வழக்கறிஞர்களின் வழக்கம். முபாஹலா செய்வதற்காக கிறிஸ்தவர்களிடம் வேத நூலை கொடுத்து சத்தியம் செய்ய சொல்வது ஒரு வழக்கம். ஆனால் நான் சொல்வதெல்லாம் சத்தியம் என்று ஒரு காயல்பட்டணம் பெண்மணி திரு குர்ஆனை கையில் வைத்து மக்கள் முன் சத்தியம் செய்து தன பேச்சை துவக்கிய வரலாறு இன்றுதான் அரங்கேறி உள்ளது. அந்த அளவுக்கு தன்னை துன்புறுதிவிட்டார்கள் என்ற வேதனை குரல் நம்மை திடுக்கிட வைத்தது.
புரட்சி தலைவி அவர்களின் இரட்டை இலைகளில் ஒரு இலையாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளதால், புரட்சி தலைவி அவர்களின் மறுபதிப்பாகவே மாறி விட்டார் போலும். பேச்சிலே ஓர் அழுத்தம், வெறி, சாதிக்க விடுகிறார்கள் இல்லையே என்ற ஏமாற்றம், சாதித்தே தீருவேன் என்ற மனோ தைரியம் எல்லாம் விசுவரூபம் எடுத்து அவர் பேச்சிலே உச்ச கட்டத்தை எட்டியபோதும், நகர்மன்றதுக்கே சம்பந்தம் இல்லாத ஒரு கோடீஸ்வரர் நகரமன்ற உறுப்பினர்களையே தன் சதுரங்க ஆட்டத்தில் பகடை காயாக்கி விளையாடுவதையும் ஆனாலும் இந்த ராணிக்கு "செக்" வைக்க அவர் முயன்று தோற்றதையும் பெயர் குறிப்பிடாமல் அவர் சாடியபோதும், கூடி இருந்த கூட்டம் அந்த நபரை அடையாளம் கண்டுவிட்டதுபோல் குரல் உயர்த்தி கூக்குரல் இட்டது, சற்று சலசலப்பை ஏற்படுத்தினாலும் இந்த பனங்காட்டு நரி அந்த சலசலப்புக்கு அஞ்சாமல் அவர் கூற்றை மறுப்பவரை மேடைக்கு அழைத்து சவால் விட்டது.
தலைவியின் ஆட்சியின் அஸ்தமனத்துக்கு நாள் குறித்து விட்டதுபோல் சிலர் பேசினாலும் அதையும் அல்லாஹ்வின் விருப்பம் இருந்தால்தான் நடக்கும் என்று அல்லாஹ்வை பூரணமாக நம்பும் தலைவி, சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்ற இஸ்லாம் சரிகாணாத வட்டத்துக்குள் சென்று பேசியதை சரிகாண முடியவில்லை.
ஒருவர் பேரறிஞர் அண்ணாவை பார்த்து, "YOUR DAYS ARE COUNTED" என்று சொன்னபோது, அண்ணா அமைதியாக் சொன்னார், "MY STEPS ARE MEASURED". இப்படிதான் தலைவியும் சொல்லி இருக்கவேண்டும்.
இப்போது, பொது மக்களுக்கு ஒரு பக்க நியாய அநியாயங்கள் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இரு கை தட்டினால்தான் சத்தம் வரும். எதிர் அணியினர் அல்லது தலைவியின் அணுகுமுறையில் குறை கண்டு, அவரை விட்டு பிரிந்து நிற்பவர்கள் அவரை வீட்டுக்கு அனுப்ப தேதி குறிப்பவர்கள் அவர்கள் தரப்பு வாதங்களை மக்கள் முன் வைக்க கடமை பட்டுள்ளார்கள். நாள், இடம், இதே திடல், இதே ஞாயிறு ஒரு இரவு பொழுதை தேர்ந்தெடுத்து அறிவியுங்கள். அமைதியாக நடந்து முடிந்த இந்த கூட்டம் போல் அவர்கள் விளக்க கூட்டமும் நடைபெறவேண்டும் என்று நடுநிலையாளர்கள் ஆசைப் படுகிறார்கள்... இரு தரப்பு வாதங்களை கேட்டு மக்கள் தீர்ப்பு வழங்கட்டும்.
எது எவ்வாறாயினும் ஊர் நலமே நம் நலம் என்று எல்லோரும் ஒரு சேர முடிவு எடுத்தால் நாளை பொழுது நல்ல பொழுதாக மலரும். இல்லை என்றால், இருள் சூழ்ந்த எதிர்காலத்தை வெளிச்சமாக்கி வைக்க ஒரு புதிய பாதை அமைக்க வேண்டும். காத்திருப்போம்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை, ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross