செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உனக்காய் வரும் ஒரு மழைக்காலம்! posted bykavimagan (qatar)[19 March 2013] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 26353
சாகும் வரை உண்ணாவிரதம் என்பது, இந்திய ஜனநாயகத்தில்
ஓர் உன்னதமானப் போரட்ட திட்டமாகக் கருதப்பட்டாலும், அது
நமது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முரண்பட்டது. இப்படிப்பட்ட ஒரு பேச்சை தலைவி அவர்கள் தவிர்த்திருக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
அதேநேரத்தில், அவரது இரண்டு மணி நேரப் பேச்சையும் முழுதாக முழுங்கிவிட்டு, இதை மட்டுமே விமர்சனம் செய்யும் நண்பர்களே!
தனது நேர்மையை நிரூபிக்க இறைமறையைக் கையிலேந்தி, அதைத் தந்தவனின் மீது ஆணையிட்டு, இஸ்லாமிய நெறிமுறையை நெஞ்சில் ஏந்தி, உண்மை என்றும் தோற்காது என்ற திருமறையின் திருவசனத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்ததை மறந்தது ஏனோ?
ஃபிர்அவுன் போன்ற சர்வாதிகாரச் சண்டாளர்களுக்கு நேர்ந்த முடிவை, திருமறையில் இருந்து எடுத்துக் காட்டியதை கவனிக்கவில்லையா?
இறையில்லத்தை இடிக்க முனைந்தவர்களின் இழிசெயலை, அபாபீல் என்னும் சிறிய பறவைகளைக் கொண்டு வல்லவன் வீழ்த்திக் காட்டிய, வான்புகழ் வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூறினாரே! அது புரியவில்லையா?
எல்லாவற்றிற்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தை
கொடுப்பதும், எடுப்பதும் இறைவன் ஒருவனே! அவனது தீர்ப்புக்கு
கட்டுப்பட தயாராக இருக்கிறேன் என்று இறை நம்பிக்கையோடு
முழங்கியது காதில் விழவில்லையா?
கீழ்த்தரமான வீடியோ எடுத்து உறுப்பினர்களை களங்கப்படுத்த முனைந்தவரை, போதை மருந்து கடத்தல் வழக்கு தொடுப்பேன் என்று அல்லாஹ்வை மறந்து ஆணவத்துடன் கொக்கரித்தவரின் முகத்திரையைக் கிழித்தாரே!
முற்றிலும் இஸ்லாமிய நெறிமுறைகளில் இருந்து விலகிவிட்ட
மாபாதகச் செயல்களுக்கு உங்களது கண்டனக் கணைகள் எங்கே?
தனிநபர், தனிநபர் என்று குறிப்பிடுகிறாரே! அவர் யார் என்பதை
துணைத் தலைவர் தேர்தலின்போது, பெயர் குறிப்பிட்டு மேடை
போட்டு மெகா முழங்கியதே! அது இன்றளவும் சாட்சியாக இணைய தளங்களில் பதிவாகி உள்ளதே! அதனைப் பார்க்கவில்லையா?
நான், நான் என்று சொல்கிறார் என்று குற்றச்சாட்டு.
அவர் யாருடைய ஆதரவும் இல்லாமல், தடைகளைத் தகர்த்தெறிந்து செய்த சாதனைகளை நான் என்று கூறாமல் நாம் என்று கூற தமிழ் அனுமதிக்குமா? மன்றத்தைக் குறித்து பேசும் போதெல்லாம் எம்முடைய, நம்முடைய என்ற வார்த்தைகளை உபயோகித்து பேசும் அவரது பெருந்தன்மையை சுட்டிக்காட்ட மனமில்லையா?
தனது பணபலம், அதிகாரபலம் இவற்றையெல்லாம் மக்கள் துணையுடன் வீழ்த்தினார் என்ற ஒரே காரணத்திற்காக, அவரை
இழிவு படுத்த நினைப்பவர்களை எதிர்த்து பொங்கி எழவில்லை
எனினும், அதை எதிர்த்து ஒரு கண்டனத்தையேனும் பதிவு செய்யும் தைரியம் இல்லையா?
எண்ணெயும், திரியும் இருந்துவிட்டால் போதுமா? நெருப்பு வேண்டாமா? அப்படிப்பட்ட நெருப்பு இளைஞர்கள், எவ்வித
அடக்குமுறைக்கும், அவதூறுகளுக்கும், முகவரியற்றவர்களின்
முக்கல்களை முத்தமென ஏற்பதற்கும் சித்தமெனக் காத்திருக்கிறோம்... ஊரின் நன்மைக்காக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross