செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[19 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26363
உண்மையின் உரைகல்லாகவும், மனசாட்சியின் பிரதி பிம்பமாகவும் ஆபிதா அவர்களின் உரை அமைந்திருந்தது.
ஒரு பெண் இவ்வளவு ஆவேசத்துடனும் ,இவ்வளவு நேரமெடுத்தும் பேசமுடியுமா..? என்று கூட்டம் முடிந்த பிறகு பலபேர் பேசி செல்வதை நானே நேரில் கேட்டேன்.
நமதூர் வரலாற்றில் இதற்கு முன்பு பல பெரிய மனிதர்கள் மக்களுக்கு நல்லவை செய்து தனிப்பட புகழ் பெற்றார்கள் நாமும் அறிந்திருக்கிறோம். ஆனால் ஒரு தனி மனிதன் தனது அகங்காரத்தால் ஆணவத்தால் தனக்கும் தனது ஊருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி கொடுத்து வருவதையும் இன்று நாம் பார்க்கிறோம்.
பொது வாழ்வுக்கு வருகிறவர்கள் நேர்மையுடன் செயல்பட்டால் மட்டும் போதாது. தைரியமாகவும் துணிச்சலுடனும் செயல்படவேண்டும் என்பதற்கு திருமதி.ஆபிதா அவர்களின் அன்றைய மேடை உரை நல்ல நிரூபணம்
நிறைய நண்பர்கள் ஆபிதா அவர்களின் உண்ணா விரத உரையை சுட்டிக்காட்டி இங்கு விமர்சித்துள்ளார்கள்
ஆபிதா ஒன்றும் அங்கு மார்க்கம் பேச வரவில்லை. அவர் ஒரு பொதுவாழ்வில் ஈடுபடும் சமூக பெண்மணியாகத்தான் அன்று வீர உரையாற்றினார். எனவே அவரது அந்த உரையை அந்த எல்கைக்குள் வைத்து பார்க்கும்போது அவரது உரையில் நாம் எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியாது.
மொத்தத்தில் அவரது நகரமன்ற அரசியல் எதிரிகளை வேறு எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் தள்ளிவிட்டதை ஆபிதா அவர்களின் வெற்றி என்றே சொல்லவேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross